இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும் – பிரபல நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் 11ந் தேதி திருமணம் நடைபெற்றது. விரைவில் இவர்களுக்கு திருமணம் ஆகி ஓராண்டு நிறைவு பெற உள்ளது. தற்போது கோலி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் உள்ளார். இந்த நிலையில் நடிகை அனுஷ்கா சர்மா கர்ப்பமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் மும்பை விமான நிலையத்திற்கு வருகை தந்த அனுஷ்கா சர்மா தனது வயிற்றை மறைத்தபடி சென்றுள்ளார். மேலும் கேமரா மேன்களையும் அருகில் நெருங்க விடாதபடி பாதுகாவலர்களையும் உடன் அனுஷ்கா சர்மா அழைத்து வந்திருந்தார். அத்துடன் ரசிகர்கள் யாருடனும் புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் அனுஷ்கா மறுத்துவிட்டார். வழக்கமாக விமான நிலையத்தில் புகைப்படம் எடுக்க வரும் ரசிகர்களுடன் ஆர்வத்துடன் அனுஷ்கா செல்பி எடுத்துக் கொள்வது வழக்கம்.

திடீரென ரசிகர்களை கண்டு ஒதுங்குவது, கேமரா மேன்களை அருகில் நெருங்க விடாமல் இருப்பது போன்றதற்கு காரணம் அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பது தான் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்நிலையில் ஒரு விழாவில் பங்கேற்றபோது, அனுஷ்காவை பார்த்த பலரும், நீங்கள் கர்ப்பமா என கேள்வி கேட்டு நலம் விசாரித்துள்ளனர்.

இதில் அனுஷ்கா கோபமாகி இந்த நிகழ்ச்சிக்கு வந்த மீடியாக்களிடம் பேசியுள்ளார். அப்போது ' நீங்க என்ன வேணும்னாலும் எழுதலாம். அது படித்து விட்டு நான் சிறிது விட்டு போய் விடுவேன். அனால் சில நாட்களிலேயே நீங்கள் பொய்யை பரப்புவது மக்களுக்கு தெரிந்துவிடும். அப்போது நீங்கள் முட்டாள் ஆகிவிடுவீர்கள். என ஆவேசமாக கூறியுள்ளார்.

ஏற்கனவே  ஒரு முறை அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியானது. சுமார் ஒரு வாரம் கழித்து அது வதந்தி என்று அனுஷ்கா சர்மா விளக்கம் அளித்தார். மேலும் தான் தாய் ஆகும் தகவலை தனது கணவருடன் இணைந்து வெளிப்படையாக தெரிவிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறியிருந்தார். இதனால் இவர் தற்போது கர்ப்பமாக இல்லை என்பது உறுதியாகியுள்ளது.