கொரோனா வைரஸில் இருந்து இந்தியாவை மீட்கும் முயற்சியாக, பிரதமர் மோடி 21 நாள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார்.  இதனால் பிரபலங்கள் மற்றும் பாமர மக்கள் வரை  யாரும் வெளியில் செல்ல முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது.

மேலும் வீட்டில் இருக்கவே நேரம் இல்லாமல் ஷூட்டிங் ஷூட்டிங் என ஓடி கொண்டிருந்த பிரபலங்கள் தற்போது கிடைத்திருக்கும் இந்த 21 நாட்களை தங்களுடைய குடும்பத்தோடு செலவிட்டு வருகின்றனர்.

அதே போல் சிலர் புத்தகம் படிப்பது, படம் பார்ப்பது, குழந்தைகளுடன் விளையாடுவது, வீட்டு வேலைகள் செய்வது, மனதிற்கு பிடித்த வேலைகளை செய்து தங்களை பிஸியாக வைத்துக் கொண்டுள்ளனர்.

அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலிக்கு அவருடைய மனைவி அனுஷ்கா ஷர்மா முடி வெட்டி விட்டுள்ளார்.  இந்த வீடியோவை அனுஷ்கா சர்மா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட அது ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Meanwhile, in quarantine.. 💇🏻‍♂💁🏻‍♀

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma) on Mar 27, 2020 at 9:59pm PDT