anushka scolding sun tv anchors

சூரியா பற்றிய கிண்டல்:

கடந்த மாதம் சூர்யா ரசிகர்கள் அனைவரையும் மிகவும் கோபமாக்கிய விஷயம், பிரபல தொலைக்காட்சியில் சினிமா சம்பந்தமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில். தொகுப்பாளினிகள் இருவர் சூர்யா அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க உள்ள படத்தில் அமிதாப் பச்சனுடன் நடிக்க உள்ளதாகவும் சூர்யா குள்ளமாக உள்ளதால் அமிதாப்பச்சனுடன் நடிக்கும் போது ஸ்டூல் போட்டு தான் நடிக்க வேண்டும் எனக் கூறி சூரியாவின் உயரத்தை கிண்டல் செய்தனர்.

கண்டனம்:

தொகுப்பாளினிகள் இப்படி கூறியதற்கு எதிராக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வந்தனர். மேலும் நடிகர் சங்க தரப்பினரிடம் இருந்து இந்த தொலைக்காட்சிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அதே போல் சூர்யா ரசிகர்கள் இந்த தொலைக்காட்சிக்கு எதிரே ஆர்பாட்டத்திலும் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அனுஷ்காவின் சாட்டையடி பேச்சு:

இந்நிலையில், சூர்யாவுடன் சிங்கம் படத்தின் மூன்று பாகங்களிலும் கதாநாயகியாக நடித்த நடிகை அனுஷ்காவிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து அவர் கூறுகையில்.

பொதுவாக இதுபோன்ற விஷயங்களுக்கு எப்போதும் நான் பதில் அளித்தது இல்லை. ஆனால் இதுகுறித்து கூற வேண்டும் என்றால் மரியாதைக்குரியதாக தெரியவில்லை.

எல்லோருக்கும் ஒரு இடம் இருக்கிறது, அவரவர் அவரது அளவில் இருக்க வேண்டும். பிரபலம் என்பதால் ஒரு பொது இடத்தில் உங்களது மனதில் தோன்றுவதை கூறுவது சரியில்லை என்று கூறி தொகுப்பாளினிகளுக்கு சாட்டையடி பதில் கொடுத்துள்ளார்.