தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகை அனுஷ்கா.

அதிலும் தற்போது இவர்,  பாகுபலி 2 படத்தில் நடித்த பின் அனுஷ்காவின் தரம் மேலும் உயர்ந்துள்ளது. பாகுபலி 2 படத்தில் இவரது கதாபாத்திரம் ரசிகர்களால் வெகுவாக பாராட்டபட்டும் வருகிறது. 

இந்நிலையில் ஏற்கனவே அனுஷ்காவுடன் ஆர்யா, ராணா, நாகசைதன்யா போன்ற பலருடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அனுஷ்கா இதை பற்றியெல்லாம் சிறிதும் கவலைப்படாமல் படங்கள் நடிப்பதில் மட்டுமே தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்திவந்தார் .

தற்போது பாகுபலி நாயகன் பிரபாஸுடன் இணைத்து கிசுகிசு வெளியாகி வருகிறது. தொடர்ந்து இதுபோன்ற செய்திகள் வெளிவருவதற்கு காரணம் தன்னுடைய உதவியாளர்களில் ஒருவர் தான் என தெரியவர, கூடவே இருந்து குழி பறித்த அவரை வேலையை விட்டு நீக்கிவிட்டாராம்.