உலக நாயகன் கமலஹாசன் , இயக்குனர்  கெளதம் மேனன் இயக்கத்தில் இணைந்து நடித்து, கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'வேட்டையாடு விளையாடு'. 

உலக நாயகன் கமலஹாசன் , இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் இணைந்து நடித்து, கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'வேட்டையாடு விளையாடு'.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த படத்தில், நடிகை ஜோதிகா, கமாலினி முகர்ஜி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க, இயக்குனர் கெளதம் மேனன் தயாராகியுள்ளார். இதுகுறித்து சமீபத்தில் கமலஹாசனை சந்தித்து அவர் பேசியுள்ளதாகவும், இந்த வருடத்தில் கூட படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் 'வேட்டையாடு விளையாடு 2 ' படத்தில், கதாநாயகியாக நடிக்க நடிகை அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். இப்படத்தில் அனுஷ்கா நடித்தால் முதல் முறையாக கமலுடன் ஜோடி போடும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கும்.