பல முன்னனி நாயகர்களுக்கு நாயகியாக தொடர்ந்து நடித்து வருபவர் அனுஷ்கா தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் சமீபகாலமாக டபுள் வேட்டை ஆடிவருகிறார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதனால் இவருக்கு வயதானாலும் இவருடைய மார்க்கெட் எகிறிப்போய் இருக்கிறது. 

பாகுபலி போன்று பயங்கர ஹிட் படங்களை கொடுத்தவருக்கு தற்போது அதே போன்ற பிரமாண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

சமீபத்தில் தனது 36 ஆவது பிறந்த நாளை கொண்டாடியது இவருக்கு மகிழ்ச்சி என்றாலும் இவரது பெற்றோர்கள் தங்கள் மகளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என வருத்தத்தில் உள்ளனர்.

இதனால் அனுஷ்காவிற்கு விரைவில் திருமணம் கைகூட வேண்டும் என பல கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்து வருகிறார்களாம்.