பாகுபலி, படத்தின் வெற்றிக்கு பின், திருமணம் செய்து கொண்டு நடிகை அனுஷ்கா செட்டில் ஆகி விடுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், திடீர் என மீண்டும் படங்களில் நடிக்க துவங்கி இருக்கிறார். 

இவர் மிகவும் எதிர்பார்த்த, பகமதி திரைப்படம் தோல்வி அடைந்தது அனைவரும் அறிந்தது தான். இந்த நிலையில் அவர் தற்போது சிரஞ்சீவியின் 'சயிர நரசிம்ம ரெட்டி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். 

இந்த படத்தை தொடர்ந்து, நீண்ட இடைவெளிக்குப்பின் மாதவனுடன் சைலென்ஸ் ஒரு படத்தில் அனுஷ்கா நடத்தி வருகிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் உள்ளிட்ட மூன்று மொழிகளில் உருவாகியுள்ளது.   இந்த படத்தை பாலிவுட் இயக்குநர் ஹேமந்த் மதுகர் என்பவர் இயக்கி வருகிறார். 

தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும், இந்த படத்தின், டைட்டில் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ளது. 

இந்த படத்தில், அனுஷ்கா செட்டி, மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே உள்பட பலர் நடித்துள்ளனர். 

இந்த படத்தில் போஸ்டர் இதோ: