Anushka is going to give Entry in Bollywood

பாகுபலியின் வெற்றிக்குப் பிறகு நடிகை அனுஷ்கா இந்திய சினிமா மட்டுமின்றி, உலக சினிமாவிலும் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறார்.

அனுஷ்கா பாகுபலியில் நடிப்பதற்கு முன்பே, பாலிவுட்டிற்கு அவரை எப்படியாவது அழைத்து வர வேண்டும் என்று பல இயக்குநர்கள் முயற்சித்தனர். ஆனால், அந்த வாய்ப்புகள் அனைத்தையும் அனுஷ்கா தவிர்த்துக் கொண்டிருந்தது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் இயக்குநர் நிவாஸ் இயக்கும் 'ஜூவனைல்' என்ற படத்திற்கு அனுஷ்காவிடம் கதை சொல்லப்பட்டது. அனுஷ்காவிற்கும் கதை மிகவும் பிடித்து விட்டதாகச் சொல்லியிருக்கிறார்.

ஆனால், அனுஷ்காவுடைய கால்ஷீட் இன்னும் கிடைக்கவில்லை. அனுஷ்காவின் கால்ஷீட் கிடைத்தப் பிறகே படத்தை துவங்குவேன், அவருடன் பணிபுரிவது மிகப்பெரிய அனுபவமாக இருக்கும் என்று இயக்குநரும் அடம் பிடிக்கிறாராம்.