தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பைரவா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கபோவதாகவும் தெறி படத்தை தொடர்ந்து இந்த படத்தையும் அட்லி இயக்குவார் என்றும் சில தினங்களாக கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில், இளைய தளபதி விஜய்யுடன் நடிக்க பல பேர் வெயிட்டிங்கில் இருக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் அந்த வாய்ப்பு அனுஷ்காவிற்கு சென்றுள்ளது. ஏற்கனவே வேட்டைக்காரன் படத்தில் இந்த ஜோடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதனால், அட்லீ தான் விஜய்யை இயக்கும் அடுத்த படத்திற்கு அனுஷ்காவை தான் கேட்டுள்ளார். ஆனால், பாகுபலி-2 முடியும் வரை எந்த படத்திலும் நடிப்பதாக இல்லை என்று கூறி மறுத்துவிட்டாராம்.

என்ன என்று விசாரிக்கையில் படத்தில் இரண்டு ஹீரோயின், இவர் மட்டுமின்றி நயன்தாராவும் இதில் நடிக்கின்றார்.

இதனால் தன் கதாபாத்திரத்தின் பலம் குறைந்துவிடுமோ என்று எண்ணி மறுத்துவிட்டாராம், தற்போது இந்த கதாபாத்திரத்தில் நடிக்க காஜலிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.