anushka caravan seized by traffic police

பாகுபலி திரைப்படத்தின் மூலம் நடிகை அனுஷ்காவின் மார்கெட் தாறுமாறாக எகிறி உள்ளது. தேவசேனா கதாபாத்திரத்தில் இவர் நடித்த விதத்தைப் பார்த்த பல தயாரிப்பாளர்கள், போட்டி போட்டுக் கொண்டு தங்களது படத்தில் ஒப்பந்தம் செய்ய முயற்சித்து வருகின்றனர். 

இதற்கிடையே பாகுபலி வெற்றிக்குப் பிறகு நடிகை அனுஷ்கா பாகுமணி என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புக் காட்சிகள் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே காலை படப்பிடிப்புக்கு அனுஷ்காவை அழைத்துச் செல்ல இளங்கோவன் என்பவருக்குச் சொந்தமான கேரவன் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது ஆணைமலை பகுதியில் தணிக்கையில் ஈடுபட்டிருந்த வட்டார போக்குவரத்து ஆய்வாளர்,கேரவனை நிறுத்தி ஆவணங்களை ஓட்டுநரிடம் கேட்டுள்ளார். ஆனால் உரிய ஆவணங்கள் அளிக்கப்படாததால், கேரவனை ஆய்வாளர் பறிமுதல் செய்தார். 

அனுஷ்காவை அழைக்கச் சென்ற கேரவன் நடுவழியில் பறிமுதல் செய்யப்பட்டது பாகுமணி படக்குழுவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.