Anushka avoiding new movies to reduce her body

ராஜமௌலியின் ‘பாகுபலி’ படத்தில் நடித்த அனுஷ்கா, அப்படத்தின் ‘தேவசேனா’ பாத்திரத்தின் மூலம் உலகளவில் பேசப்பட்டார்.

பாகுபலி முதல் பாகத்தில் நடித்தப் பிறகு ‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக அனுஷ்கா உடல் எடையை கூட்டினார். அதன்பிறகு உடற்பயிற்சி, நீண்ட தூர ஓட்டம் என பல்வேறு முயற்சிகள் செய்தும், அவருடைய உடல் எடை எதிர்பார்த்த அளவு குறையாததால் யோகா மூலம் உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்கிறார்.

‘பாகுபலி 2’-ஆம் பாகத்தில் அனுஷ்காவுக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த வேடமென்பதால், அவர் உடல் மெலிய வேண்டும் என்று ராஜமௌலி விரும்பினார். இதற்காக அனுஷ்கா தொடர்பான காட்சிகளைக் கடைசியில் படமாக்கினார். அதற்குள் உடல் எடையைக் குறைக்க அவகாசம் அளித்தார். ஆனால், அவர் எதிர்பார்த்தது நடக்கவில்லை. எனவே கிராபிக்ஸ் மூலம் அனுஷ்காவை ஒல்லியாகக் காண்பிக்க பல கோடி செலவிட்டனர்.

பாகுபலி படத்துக்குப் பிறகு தற்போது ‘பாக்மதி’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார் அனுஷ்கா. இதன் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் வேறு படங்களில் கமிட் ஆகாமல் தற்போது உடல் குறைப்பு பயிற்சி மற்றும் யோகாசனத்துக்காக முழுநேரம் ஒதுக்கி, நடிப்புக்குத் தற்காலிகமாக விடுமுறை எடுத்துள்ளாராம்.

இந்த முயற்சியிலாவது எப்படியாச்சும் உடல் எடையைக் குறைக்கனும் என்று நம்பிக்கையோடு இருக்கிறார்.