தமிழில் வேட்டைக்காரன், வானம், தெய்வத்திருமகள், தாண்டவம், உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்தவர் நடிகை அனுஷ்கா. 

தமிழில் வேட்டைக்காரன், வானம், தெய்வத்திருமகள், தாண்டவம், உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்தவர் நடிகை அனுஷ்கா.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கும் இவர் நடிப்பில் வெளியான பாகுபலி மற்றும் பாகுபலி 2 திரைப்படம் உலகம் முழுவதிலும் வசூல் சாதனை நிகழ்த்தியது. 

கடைசியாக இவர் நடிப்பில், கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட பாகமதி படம் திரைக்கு வந்தது. ஆனால் கலவையான விமர்சங்களை மட்டுமே பெற்று தோல்வியை தழுவியது. 

இந்த படத்தை தொடர்ந்து உடல் எடை கூடியதால் அனுஷ்காவிற்கு சரிவர படவாய்ப்பு கிடைக்காமல் போனது. இதனால் வெளிநாட்டிற்கு சென்று சிகிச்சை பெற்று உடல் எடையை குறைத்து திரும்பினார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது நடிகர் மாதவனுடன் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

நடிகை அனுஷ்காவிற்கு 37 வயது ஆகியும் இதுவரை ஆகவில்லை என பெற்றோர் மிகுந்த கவலையில் உள்ளனர். அனுஷ்காவின் ஜாதகத்தில் சில தடங்கல்கள் இருப்பதால் கோயில் கோயிலாக சென்று பரிகார பூஜைகள் செய்தனர் ஆனால் எனோ இது வரை அனுஸ்காவிற்கு வரன் ஏதும் கைகூடவில்லை. 

மேலும் ஏற்கனவே அனுஷ்காவிற்கும் தெலுங்கு நடிகர் பிரபாஸுக்கும் காதல் உள்ளதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளனர் என்றும் பல தகவல்கள் பரவியது. இதனை இருவரும் உறுதிப்படுத்தாமல் இருந்தனர்.

இந்த நிலையில் பாகுபலி டைரக்டர் ராஜமவுலியின் மகன் கார்த்திகேயா திருமணத்தில் இருவரும் ஜோடியாக பங்கேற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். மணமக்களை வாழ்த்தும் போது ஜோடியாகவே சென்றனர் திருமண நிகழ்ச்சியில் இணைந்து நடனம் ஆடினர். இந்தப் பாடல்களும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதன்மூலம் அவர்கள் காதலிப்பது உறுதியாகி உள்ளது என்று தெலுங்கு பட உலகில் கிசுகிசுக்கள் வந்து கொண்டே இருக்கிறது. ஆனால் இப்போது இருவரும் அமைத்து காத்து வருவதுதான் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.