அருந்ததி படத்தின் வெற்றிக்குப்பிறகு, நடிகை அனுஷ்கா ஹீரோயினை மையப்படுத்திய கதைகளை அதிகம் தேர்வு செய்து நடித்துவருகிறார் என்பது நாம் அறிந்தது தான். 

இவர் நடிப்பில் கடைசியாக வெளியான 'பாகமதி' படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனினும் மனம் தளராக அனுஷ்கா, அடுத்து ஹேமந்த் மதுக்கர் இயக்கத்தில் 'நிசப்தம்' படத்தில் நடித்துள்ளார். 

சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகும் இந்தப் படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் என  5 மொழிகளில் தயாராகிறது.  நிசப்தம் படத்தில், சாக்ஷி என்ற கேரக்டரில் வாய்பேசாத காது கேளாத ஓவியராக அனுஷ்கா நடித்துள்ளார். 

அந்தோணி என்ற கேரக்டரில் பார்வையற்ற இசைக்கலைஞராக மாதவன் நடித்துள்ளார். அஞ்சலி, ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். 

5 மொழிகளில் உருவாகியுள்ள நிசப்தம் படத்தின் டீசர், போஸ்டர் ஆகியவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது. 

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியை அரிகார பூர்வமாக அறிவித்துள்ளனர் படக்குழுவினர். அதன்படி இப்படம், ஏப்ரல் 2 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.