நடிகை அனுஷ்கா - பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து மிக பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'பாகுபலி'. இந்த படத்தில் நடித்த அனைவருக்குமே அவர்களது திரை வாழ்வில் மிக பெரிய திருப்பு முனையாக இப்படம் அமைந்தது.

இந்த படத்தை தொடர்ந்து, இவருக்கு சீரியஸாக திருமணம் செய்து வைக்க இவருடைய பெற்றோர் முயற்சி செய்தும், இன்னும் இவரின் மனதிற்கு பிடித்த மாப்பிளை மட்டும் கிடைக்க வில்லை. இவருடைய ஜாதகத்தில் தோஷம் இருப்பதாக, பல பூஜைகளும் நடத்தினர் ஆனால் எந்த பயனும் இல்லை.

இதனால், கொஞ்ச நாட்கள் திரையுலகை விட்டு விலகியே இருந்த அனுஷ்கா தற்போது, மீண்டும் 'சைலென்ஸ' என்கிற படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு மும்புரமாக நடந்து வருகிறது.

இந்த படத்தை தொடர்ந்து தற்போது ராஜமௌலி, இரண்டு சுதந்திர போராட்ட வீரர்கள் வாழ்க்கையை மையப்படுத்தி எடுத்து வரும் 'ஆர் ஆர் ஆர்' படத்தில், மூன்று நிமிடம் மட்டுமே வர கூடிய, சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்த காட்சி இடைவேளைக்கு முன் வருகிறதாம். மூன்று நிமிட காட்சி என்றாலும் பரவாயில்லை என ராஜமௌலிக்காக நடிக்க ஒப்புக்கொண்டாராம் அனுஷ்கா.