இயக்குனர் பாலா இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் 'நாச்சியார்' இதில் சீரும் போலீஸ் அதிகாரியாக நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார் ஜோதிகா. 

இரண்டு சிறுவர்களின் உண்மையான காதலை கூறும் இந்த படத்தில் சிறுவர்களாக நடித்த ஜி.வி.பிரகாஷ் மற்றும் இவானாவிற்கும் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இயக்குனர் பாலாவே இயக்கி தயாரித்த இந்த படத்தை தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிட திட்டமிடப்பட்டு 1 கோடி வரை பேரம் பேசப்பட்டது. ஆனால் பாலா டப்பிங் செய்வதை விட ரீமேக் செய்துவிடலாம் என்று கூறிவிட்டாராம். 

மேலும் இந்த படத்தில் ஜோதிகா நடித்த கதாப்பதிரத்தில் நடிகை அனுஷ்காவை நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என்று பாலா கூறியதால். தற்போது இந்த படத்தில் அனுஷ்காவை நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.