Anus Pose who was sexually harassed by actress Sonu has been arrested.

விரைவு ரயிலில் தமிழ் நடிகை சனுஷாவுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆன்டு போஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

நடிகை சனுஷா கேரளத்தின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள நீலேஸ்வரத்தில் பிறந்தவர். வினயன் இயக்கிய நாளை நமதே என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்தார். பின்னர், திலீப் நாயகனாக நடித்த மிஸ்டர் மருமகன் என்ற மலையாளத் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.

மேலும், ரேணிகுண்டா, பீமா, அலெக்ஸ் பாண்டியன், உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்துள்ளார். 

இந்நிலையில், இவர் விரைவு ரயிலில் சென்று கொண்டிருந்தபோது ஆண்டு போஸ் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இதைதொடர்ந்து சனுஷா டிடிஆரிடம் புகார் அளித்துள்ளார். 

இதையடுத்து டிடிஆர் போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். தகவலறிந்து வந்த போலீசார் பாலியியல் தொந்தரவு கொடுத்த நபரை அதிரடியாக கைது செய்தனர்.