அனிருத்தின் பட்டையை கிளப்பும் இசையில், மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடல் தற்போது 250 மில்லியன் ரசிகர்களால் யூடியூபில் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை தளபதி விஜய்யின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள். 

அனிருத்தின் பட்டையை கிளப்பும் இசையில், மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடல் தற்போது 250 மில்லியன் ரசிகர்களால் யூடியூபில் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை தளபதி விஜய்யின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.

தளபதி விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்திருந்த, 'மாஸ்டர்' திரைப்படம் இந்த ஆண்டு பொங்கல் திருவிழாவின் போது 50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் வெளியானது. வெளியான இரண்டே நாட்களில், சுமார் 200 கோடி வசூலித்து சாதனையை படைத்தது. பின்னர் பிரபல ஓடிடி தளத்திலும் வெளியாகி ரசிகர்களால் ரசிக்கப்பட்டது.

இந்த படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக செம்ம ஸ்டைலிஷ் வாத்தியாக நடித்து பட்டையை கிளப்பி இருந்தார் விஜய். இவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். மேலும் முரட்டு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி தளபதிக்கு செம்ம டஃப் கொடுத்தார். எனவே விஜய்யின் நடிப்பை விட, விஜய் சேதுபதியின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. எப்போது 'பவானியை' மையமாக வைத்து ஒரு படத்தை எடுப்பீர்கள் என்கிற கேள்விகளும் ரசிகர்களால் கேட்டகப்பட்டது. மேலும் தளபதி ரசிகர்களே... லோகேஷ் கனகராஜுக்கு இதுகுறித்து கோரிக்கை வைத்தனர்.

மேலும் விஜய் டிவி தீனா, கௌரி கிஷன், ஆண்ட்ரியா, ரம்யா, சாந்தனு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்திருந்தது. 'மாஸ்டர்' படத்தில் இருந்து வெளியான குட்டி ஸ்டோரி, வாத்தி கம்மிங், வாத்தி ரைடு என அனைத்து பாடல்களும், ரசிகர்களை கவர்ந்து அடுத்தடுத்த சாதனைகளை படைத்து வருகிறது. குறிப்பாக வாத்தி கம்மிங் பாடலுக்கு பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவரவருக்கு பிடித்த வர்ஷனில் டான்ஸ் ஆடி வெளியிட்டு லைக்குகளை அள்ளினர்.

இது ஒரு புறம் இருக்க, தற்போது வாத்தி கம்மிங் பாடல், 250 மில்லியன் ரசிகர்களால், யூ டியூபில் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. இந்த தகவலை, தளபதி ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு தெறிக்க விட்டு வருகிறார்கள். #VaathiComming என்கிற ஹேஷ்டேக் தற்போது ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. 'மாஸ்டர்' படத்தை தொடர்ந்து விஜய், இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், 'தளபதி 65 ' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Scroll to load tweet…