Rashmika Mandanna Deep Fake Video : சில வாரங்களுக்கு முன்பு வெளியான ஒரு டீப் ஃபேக் வீடியோவில், நடிகை ராஷ்மிகா மண்டனாவை ஆபாசமாக சித்தரித்து வெளியானது பெரும் அதிர்ச்சிகளை ஏற்படுத்தியது.

ஆபாசமான உடையில், ஒரு லிப்ட்டில் இருந்து ராஷ்மிகா வெளியே வந்து பேசுவது போல், அந்த பேக் வீடியோ இருந்தது. இந்த போலியான வீடியோவுக்கு, பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் உட்பட பலர் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்திய நிலையில், இந்த டீப் பேக் வீடியோ வெளியிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி மகளீர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது. 

புகழின் உச்சத்தில் இருக்கும் நடிகைகளுக்கும் நேரும் இந்த விஷயம் நாளை, சாதாரண பெண்களையும் பாதிக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது போன்ற உயர் தொழில்நுட்பங்களால் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ள நிலையில், இது போன்ற வீடியோ வெளியிடும் நபர்கள் மீதும் மிகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh Shivan: 'LIC' பட பூஜை போட்டதுமே விக்கிக்கு வந்த புது பிரச்சனை! அப்செட்டில் நயன்? எச்சரித்த இயக்குனர்!

இந்நிலையில் அந்த அதிர்வலைகளைகளே இன்னும் ஓயாத நிலையில், இப்பொது இணையத்தில் ராஷ்மிக்காவை சித்தரிக்கும் மற்றொரு டீப் ஃபேக் வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டு வருகின்றது. இதனை கண்ட ராஷ்மிக்காவின் ரசிகர்கள் கடும் வேதனை அடைந்துள்ளனர். பெண்களின் பாதுகாப்பு என்பது தொடர் சிக்கலில் இருந்து வருவதாக அவர்கள் கூறுகின்றனர். 

என்னுடைய தப்பான முடிவு.. 5 உயிரை பலிவாங்கிட்டு.. எப்படி இருந்த நான்.. இப்போ? - மனம் குமுறும் கஞ்சா கருப்பு!

View post on Instagram

உடனடியாக இந்த விஷயத்தில் அரசு தலையிட்டு இதற்கு நிரந்தர தீர்வு கொண்டுவரவேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர். இந்த ஆபாச வீடியோவை வெளியிட்ட நபரை தற்போது சைபர் போலீசார் தேடி வருகின்றனர். இந்த புதிய சிக்கல் காரணமாக நடிகைகள் பலரும் இப்பொது கடும் அச்சத்தில் உள்ளனர் என்றே கூறலாம். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.