MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Vignesh Shivan: 'LIC' பட பூஜை போட்டதுமே விக்கிக்கு வந்த புது பிரச்சனை! அப்செட்டில் நயன்? எச்சரித்த இயக்குனர்!

Vignesh Shivan: 'LIC' பட பூஜை போட்டதுமே விக்கிக்கு வந்த புது பிரச்சனை! அப்செட்டில் நயன்? எச்சரித்த இயக்குனர்!

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'LIC' படத்தின் பூஜை நேற்று போடப்பட்ட நிலையில், இன்று இயக்குனர் விக்னேஷ் சிவனை எச்சரிக்கும் விதமாக... இயக்குனர் எஸ்.எஸ்.குமரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

2 Min read
manimegalai a
Published : Dec 15 2023, 01:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

இளைய தலைமுறை ரசிகர்களுக்கு ஏற்ற வகையில், கதை, திரைக்கதை எழுதி படம் இயக்கும் விக்னேஷ் சிவன் AK 62 படத்தை இயக்கும் வாய்ப்பை இழந்த நிலையில்... தற்போது இளம் இயக்குனரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதனை வைத்து தன்னுடைய அடுத்த படத்தை இயக்க தயாராகி உள்ளார். அதன்படி இந்த படத்தின் பூஜை நேற்று போடப்பட்டது.

26

இதில் தயாரிப்பாளர் லலித் குமார், நடிகர் பிரதீப் ரங்கநாதன், நடிகை கீர்த்தி ஷெட்டி, அனிரூத், விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், விக்னேஷ் சிவனை விடாது கருப்பாக புதிய பிரச்சனை வந்து தலைவலி கொடுத்துள்ளது. இதனால் நயன்தாராவும் கடும் அப்செட்டில் உள்ளதாக கூறப்படுகிறது.

களைகட்டிய பிரபு மகள் ஐஸ்வர்யாவின் இரண்டாவது திருமணம்! நேரில் வந்து வாழ்த்திய ‘லெஜண்ட்’ சரவணன்!

36

இந்த பிரச்சனைக்கு காரணம் 'LIC' என்கிற தலைப்பு தான். இதுகுறித்து பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.குமரன் அறிக்கை வெளியிட்டு, விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடுப்பேன் என எச்சரித்துள்ளார் . 

46

இந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது, "மதிப்பிற்குறிய பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கு வணக்கம். திரு விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்திற்கு L I C என்று பெயரிட்டு இருப்பதைக்கண்டு அதிர்ச்சியும் மன உளைச்சலும் அடைந்தேன். காரணம் LIC என்கிற பெயரை 2015 ம் ஆண்டே என் தயாரிப்பு நிறுவனமான suma pictures இன் வாயிலாக பதிவு செய்து வைத்திருக்கிறேன்.

பிரமாண்டமாக நடந்து முடிந்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் - ஐஸ்வர்யா திருமணம்! நேரில் சென்று வாழ்த்திய விஷால்!

56
Vignesh Shivan

Vignesh Shivan

இதை அறிந்த திரு விக்னேஷ் சிவன் தன்னுடைய புதிய படத்திற்கு அந்தபெயரை தரக்கோரி தனது மேலாளர் திரு மயில்வாகனன் மூலம் என்னை அணுகினார். ஆனால் LIC என்கிற தலைப்பு நான் இயக்கும் படத்திற்கு மிகச்சரியாக பொருந்துவதாலும், கதையின் பலமே அந்த தலைப்பை ஒட்டி அமைந்திருப்பதாலும் நான் மறுத்துவிட்டேன். ஆக இந்த தலைப்பை நான் முறைப்படி பதிவு செய்து வைத்திருக்கிறேன் என்பதை திரு விக்னேஷ் சிவன் நன்றாக அறிவார். அப்படி இருந்தும் இந்த தலைப்பை அவர் தனது படத்திற்கு வைக்கிறார் என்று சொன்னால் அது சட்டத்திற்கு புறம்பானது மட்டுமல்ல எளிய, சிறிய தயாரிப்பாளர்களை நசுக்கும் செயலாகும்.
 

66

இச்செயல் முழுக்க முழுக்க அதிகாரதன்மை கொண்டது. அவரின் இந்த செயலுக்கு நியாயம் கேட்டு ஊடகத்திற்கு முன் நிற்கிறேன். LIC என்கிற தலைப்பு என்னிடம் மட்டுமே இருப்பதால்  அதை திரு விக்னேஷ் சிவன் தன் படத்தில் எந்த விதத்திலும் பயன்படுத்தக்கூடாது  என்று இதன் மூலம் தெரியப்படுத்த விரும்புகிறேன். இனியும் இச்செயலை திரு விக்னேஷ் சிவன் தொடர்வார் என்றால் சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுப்பேன் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தற்போது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
நயன்தாரா
பிரதீப் ரங்கநாதன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved