சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும், 'அண்ணாத்த' திரைப்படம் லாக் டவுன் பிரச்சனைக்கு பின், மீண்டும் ஹைதராபாத்தில் துவங்கிய நிலையில், படக்குழுவினர் 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் இன்று முதல் படக்குழுவினர் படப்பிடிப்பை துவங்கியுள்ளனர். 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும், 'அண்ணாத்த' திரைப்படம் லாக் டவுன் பிரச்சனைக்கு பின், மீண்டும் ஹைதராபாத்தில் துவங்கிய நிலையில், படக்குழுவினர் 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் இன்று முதல் படக்குழுவினர் படப்பிடிப்பை துவங்கியுள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் அவருடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். கொரோனா லாக்டவுன் காரணமாக நிறுத்தப்பட்ட இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த டிசம்பர் மாதம் 14ம் தேதி தொடங்கப்பட்டது. இதற்காக நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் டிசம்பர் 13-ம் தேதி சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் ஐதராபாத் புறப்பட்டுச் சென்றனர்.

ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் ஒரு வாரத்திற்கும் மேலாக ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. அப்போது படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிய 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஓட்டுமொத்த படக்குழுவும் பயோபபுளுக்குள் இருந்த நிலையில், தொற்று பரவியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து ரஜினிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு முடிவில் தொற்று இல்லை என்பது உறுதியானது. 

இருந்தாலும் அவரது ரத்த அழுத்தம் சீராக இல்லாத காரணத்தால் ஐதராபாத் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு நாள்கள் சிகிச்சை பெற்று சென்னை திரும்பினார் ரஜினிகாந்த். அதைத்தொடர்ந்து தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்றும அறிவுக்கு பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது ரஜினிகாந்தின் உடல் சீராக உள்ளதை தொடர்ந்து, சில நாட்களுக்கு முன், இளையராஜாவின் புதிய ஸ்டூடியோ, மற்றும் மருமகன் தனுஷ் கட்ட உள்ள புதிய வீட்டின் பூமி பூஜையில் கலந்து கொண்டார்.

இந்நிலையில் இன்று முதல், சென்னையில் 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பும் துவங்கியுள்ளது. 30 நாட்கள் படப்பிடிப்பை சென்னையில் முடிந்த பிறகு, வடமாநிலங்களில் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் பணிகள் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் படப்பிடிப்பை முடித்து 'அண்ணாத்த' திரைப்படம், தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய சன் பிச்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.