Asianet News TamilAsianet News Tamil

போடுடா வெடியை... இந்த வருஷம் 'அண்ணாத்த' தீபாவளிதான்! ரிலீஸ் தேதியை வெளியிட்ட சன் பிச்சர்ஸ்!

​​'தர்பார்' படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ''அண்ணாத்த''. இதில் நடிகை குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. 
 

Annaatthe movie released in  Deepavali
Author
Chennai, First Published Jan 25, 2021, 6:34 PM IST

​​'தர்பார்' படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ''அண்ணாத்த''. இதில் நடிகை குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. 

இந்த படத்தின் முதல் இரண்டு கட்ட ஷூட்டிங் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த நிலையில்,  உலகம் முழுவதையும் உச்சகட்ட அச்சத்தில் வைத்துள்ள கொரோனா பீதியால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலே படப்பிடிப்பிற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், சமீபத்தில் திரைப்பட ஷூட்டிங்கிற்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. 

Annaatthe movie released in  Deepavali

எனவே டிசம்பர் 15ம் தேதி, பல்வேறு பாதுகாப்புகளுக்கு மத்தியில் மீண்டும் 'அண்ணாத்த' படப்பிடிப்பு துவங்கியது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் "அண்ணாத்த" படப்பிடிப்பில்  கலந்து கொள்வதற்காக சென்னை டூ ஐதராபாத் தனி விமானத்தில் பறந்து சென்று, ஷூட்டிங்கில் கலந்து கொண்டார்.

உச்சகட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் படக்குழுவினர், அண்ணாத்த படக்குழுவில் கலந்து கொண்ட போதிலும் படக்குழுவினர் 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு, நடிகர், நடிகைகள் அனைவரும் சென்னை திரும்பினர். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டாலும், ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக மூன்று நாட்கள் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார்.

Annaatthe movie released in  Deepavali

அதே போல், இதனை கடவுள் கொடுத்த எச்சரிக்கையாக எடுத்து கொண்டு இனி அரசியலுக்கு வரப்போவதில்லை என்பதையும் அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார். மேலும் படக்குழுவினர் தன்னால் பாதிக்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். 

தற்போது வரை, மீண்டும் 'அண்ணாத்த' படப்பிடிப்பு ஆரம்பமாகாததால், எப்போது இந்த படம் ரிலீஸ் செய்யப்படும் என்கிற கேள்வி ரசிகர்கள் மனதில் இருந்த நிலையில், இதற்க்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக தற்போது சன் பிச்சர்ஸ் நிறுவனம்... 'அண்ணாத்த' படம் இந்த ஆண்டு நவம்பர் மாதம் 4 ஆம் தேதி தீபாவளியை வெளியாகும் என அறிவித்துள்ளனர். 

 

Follow Us:
Download App:
  • android
  • ios