Shanmugam Promise To Rathna : அறிவழகனை பார்க்க ஆசைப்படும் ரத்னாவின் ஆசையை சண்முகம் நிறைவேற்றுவாரா இல்லையா என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Shanmugam Promise To Rathna : ஜீ தமிழில் ஒளிபரப்பு செய்யப்படும் சீரியலில் அண்ணா சீரியலும் ஒன்று. இந்த சீரியல் இப்போது சூடுபிடிக்க தொடங்கியிருக்கிறது. அதாவது, நேற்றைய எபிசோடில் சண்முகம் அனைவருக்கும் பிரியாணி வாங்கிக் கொண்டு வந்து ஊட்டி விடுட்ம் நிலையில் அடுத்ததாக என்ன நடக்கிறது என்று இன்றைய தொகுப்பில் பார்க்கலாம். சண்முகம் பிரியாணி வாங்கிட்டு வர எல்லாரும் ஒன்று சேர்ந்து சந்தோசமாக சாப்பிடுகின்றனர். அப்போது ரத்னா எனக்கு அறிவழகனை பார்க்கணும் என்று ஆசையை சொல்ல சண்முகம் கண்டிப்பாக கூட்டிட்டு போறேன் என்று வாக்கு கொடுக்கிறார்.
மறுபக்கம் சிவபாலன் சாப்பிட உட்கார உனக்கு தான் கல்யாணம் ஆகிருச்சுல, போய் உன் பொண்டாட்டி கையால சாப்பிடு, இல்லனா நாங்க எல்லாரும் சாப்பிட்ட பிறகு சாப்பிடு என்று சொல்ல அப்படிப்பட்ட சாப்பாடே எனக்கு தேவையில்ல என்று கோபித்து கொண்டு எழுந்து செல்கிறார். சௌந்தரபாண்டி பாண்டியம்மாவிடம் என் புள்ளையை என்ன கொடுமை பண்ணுறாங்க, என்ன நடந்தாலும் அந்த இந்த வீட்டுக்குள்ள மருமகளா நுழைய விட மாட்டேன் என்று சொல்கிறார். அடுத்து பரணி தூங்கி கொண்டிருக்க கிச்சனில் சத்தம் கேட்டு எழுந்து செல்கிறார்.
என்ன பண்ணிட்டு இருக்க என்று கேட்க அறிவழகனுக்காக பால் கொழுக்கட்டை செய்வதாக சொல்கிறாள். பரணி ரத்னாவை ஏமாற்றி விடாதே என்று சண்முகத்திடம் சொல்ல அவன் கண்டிப்பாக அறிவழகனை பார்க்க வைப்பேன் என்று சொல்கிறான். அதோடு இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பது குறித்து அறிந்து கொள்ள இன்றைய எபிசோடை பார்க்கலாம்.
