சன் மியூசிக் தொலைக்காட்சியில் 10 வருடங்களுக்கு மேல் தொகுப்பாளினியாக பணியாற்றியவர் அஞ்சனா. இவரின் துரு துரு பேச்சுக்கு பல ரசிகர்கள் உள்ளனர்.  இவருக்கு பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்புகள் கிடைத்தும் அதனை ஏற்க மறுத்து திருமணம் ஆகும் வரை தொகுப்பாளராகவே இருந்தார். 

இந்நிலையில் இவர் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கிய 'கயல்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான, சந்திரனை கடந்த 2016 ஆம் ஆண்டு காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். 

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், மற்றும் படவிழாக்களை தொகுத்து வழங்கி வந்த இவர், திடீர் என தான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இருந்து விலகுவதாக கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். 

பின் தான் அனைவருக்கும் தெரிந்து, அஞ்சனா கர்ப்பமாக இருப்பதால் தான் நிகழ்ச்சிகளை விட்டு விலகினார் என்று. 

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் தான் இவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தது முதல் அதிகமாக சமூக வலைத்தளம் பக்கம் வராமல் இருந்த இவர், தற்போது முதல் முறையாக தன்னுடைய குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

அந்த கியூட் போட்டோவை அஞ்சன மற்றும் சந்திரன் ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.