'பேரன்பு' படத்தைத் தொடர்ந்து அஞ்சலி தற்போது நடித்து முடித்துள்ள திகில் திரைப்படம் 'லிசா'. இதுவரை அவர் நடித்திராத புதிய கெட்டப்பில் நடித்துள்ளார் அஞ்சலி.

இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  பிஜி முத்தையா தயாரிப்பில்,  ராஜு விஸ்வநாத் என்கிற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார். இவர் சூர்யா நடித்த '24' படத்தை இயக்கிய, இயக்குனர் விக்ரம் குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

தன்னுடைய தாத்தா பாட்டி வாழ்ந்த வீட்டிற்கு, வரும் அஞ்சலி... அங்கு சந்திக்கும் வித்தியாசமான திகில் அனுபவங்களை வைத்தும், அஞ்சலி உடலில் பேய் புகுவதற்கான காரணத்தையும் மிகவும் விறுவிறுப்புடன் திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குனர். 

இந்த படத்தில், சாம் ஜோன்ஸ், யோகிபாபு, பிரேமானந்தா, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிஜி முத்தையா இப்படத்தை தயாரித்து ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். 3டி படமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இப்போதே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.