பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்து ஒரு வாரம் ஆன போதிலும், இன்னும் அந்த நிகழ்ச்சியின் தாக்கத்தில் இருந்து ரசிகர்கள் வெளியே வரவில்லை. தங்களுக்கு பிடித்த போட்டியாளரை விமர்சனம் செய்தவர்களை தொடர்ந்து, மீம்ஸ் போட்டு தாக்கி வருகிறார்கள்.

அந்த வகையில் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ரம்யா பாண்டியன், ஆரிக்கு எதிராக நடந்து கொண்டானை சுட்டி காட்டி வருவதால், அவருக்கு எதிராக விமர்சனம் செய்பவர்களுக்கு  அனிதா சம்பத் தன்னுடைய ஆதங்கத்தை கொட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்...  ’பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது ஒரு விளையாட்டு மட்டுமே அது முடிந்துவிட்டது. பிக்பாஸ் வீட்டில் 18 போட்டியாளர்களுடன் இருக்கும் போது மன அழுத்தம் கொஞ்சம் அதிகமாக இருக்கும். அப்போது வெளிப்பட்ட சில குணங்கள் தினசரி வெளிப்படும் என்று எதிர்பார்க்க வேண்டாம். பிக்பாஸ் போட்டியாளர்களை குறிப்பாக பெண் போட்டியாளர்களையும் அவர்களுடைய குடும்பத்தை பற்றியும் நெகட்டிவ் கமெண்ட் செய்வதை தயவு செய்து நிறுத்துங்கள்.

இவ்வாறு விமர்சனம் செய்வதால் உங்களுக்கு என்ன பயன் கிடைக்கப் போகிறது? ஒரு மெசேஜ் போட்டு விட்டு நீங்கள் உங்கள் வேலையை பார்க்க போய் விடுவீர்கள். ஆனால் அந்த மெசேஜை படிக்கும் சம்பந்தப்பட்டவர்கள் எவ்வளவு மனம் நொந்து போகும் என்பதை யோசித்துப் பாருங்கள். எல்லோரும் அவர்களுடைய தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்வார்கள், தங்களை மாற்றிக் கொள்வார்கள்.

அனைத்து போட்டியாளர்களையும் ரசிக்க பிக்பாஸ் ஒன்றும் ’குக் வித் கோமாளி’ மாதிரி கிடையாது. பிக்பாஸில் இருக்கும் எல்லோரையும் நீங்கள் ரசிக்க முடியாது. இதை ஒரு விளையாட்டாக மட்டும் பாருங்கள். அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேசாமல் அவர்களை நிம்மதியாக வாழ விடுங்கள்’ என்று அனிதா சம்பத் தெரிவித்துள்ளார்.