பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து, இந்த வருட நியூ இயர் கொண்டாட்டத்தை மகிழ்ச்சியாக குடும்பத்தோடு கொண்டாட வேண்டும் என்கிற ஆசையில் வெளியே வந்த அனிதாவிற்கு, வெளியேறிய ஓரிரெண்டு நாட்களிலேயே காத்திருந்தது பேரதிர்ச்சி. அனிதா சம்பத்தின் தந்தையும் பத்திரிகையாளரும், எழுத்தாளருமான ஆர்.சி.சம்பத் ஷீரடி சென்று விட்டு, சென்னைக்கு ரயிலில் திரும்பிக்கொண்டிருக்கும் போதே மரணமடைந்தார்.

அவரது உடல் பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து ஆம்புலன்சில் சென்னைக்கு எடுத்து வரப்பட்டது. இந்த திடீர் மரணம் அனிதா சம்பத்தின் குடும்பத்தினர் மத்தியில் பேரதிர்ச்சியையும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

அப்பாவின் நினைவில் இருந்து மீள முடியாமல் தவிக்கும் மகளாக அனிதா சம்பத் , கடைசியாக தன்னுடைய தந்தையுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு உருக்கமாக தன்னுடைய கருத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

அதில் "அப்பாவ கடைசியா இப்படிதான் பாத்தேன்..பிக்பாஸ் quarantine போகும்போது எடுத்தது.. அப்பானா எனக்கு உயிரு..எங்க எங்கயோ டூர் கூட்டிட்டு போனும்னு ஆசையா ஓடி வந்தேன்..எனக்கு முன்னாடியே நீயே கிளம்பி போய் இருக்க கூடாது டாடி.. ஒரு நாள் பொருத்து இருந்தா நான் கூட வந்துருப்பேன்..உன்ன வழியிலயே hospital கூட்டிட்டு போய் இருப்பேன்..நீ இன்னும் பத்து வர்ஷமாவது என் கூட இருந்து இருப்ப.. Sorry daddy..என்னால உன்ன காப்பாத்த முடியல..வாழ்நாள் முழுவதும் இந்த குற்றஉணர்ச்சி என்ன விட்டு போகாது..

எங்க போன ராசா... என மனம் உருக வைக்கும் பதிவை போட்டுள்ளார்.