Asianet News TamilAsianet News Tamil

நெனச்சாலே பதறுது! வீட்டுக்கு ஒரு துப்பாக்கி கொடுத்துடுங்க.. ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து அனிதா சம்பத்தின் வீடியோ!

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர், ஆம்ஸ்ட்ராங் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து, நடிகை அனிதா சம்பத் ஆதங்கத்துடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 

Anitha Sampath emotional scary speech for Armstrong death mma
Author
First Published Jul 6, 2024, 7:09 PM IST

சென்னை, பெரம்பூரை சேர்ந்தவர் ஆம்ஸ்ட்ராங். 52 வயதாகும் இவர் பகுஜன் சமாஜ் தேசிய கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆவார். நேற்று இரவு தனது வீட்டின் வெளியே நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது, உணவு டெலிவரி ஊழியர்கள் போல் வந்து இவரை சுற்றி வளைத்த ஆறு பேர். அவர் நிதானித்து கொண்டு, அந்த கும்பலில் இருந்து தப்பிக்க முயல்வதற்குள், நான்கு பேர் கைகளை பிடித்து கொள்ள ஒருவர் உடலை அசையவிடாமல் பிடிக்க, மர்ம கும்பல் கண் இமைக்கும் நேரத்தில் பதுக்கி வைத்திருந்த பயங்கர ஆயுதங்களை கொண்டு ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக வெட்டி சாய்த்தனர்.

 ரத்த வெள்ளத்தில் இருந்த அவரை உடனடியாக மருத்துவமனையில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனுமதித்த போதும், சிகிச்சை பலனின்றி ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் தற்போது ஒட்டு மொத்த சென்னையே பீதியில் உறைந்துள்ளது. 8 பேர் இந்த கொலை சம்மந்தமாக போலீசில் ஆஜராகியுள்ள நிலையில், இவர்கள் உண்மை குற்றவாளிகள் இல்லை ... உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என அரசியல் தலைவர்கள் மற்றும் மக்கள் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.

Anitha Sampath emotional scary speech for Armstrong death mma

Anna Serial: தாய் பாசத்தை கொட்டி தீர்க்கும் முத்துப்பாண்டி.! சண்முகத்தை பிரியும் பரணி? அண்ணா சீரியல் அப்டேட்!

இந்நிலையில் அனிதா சம்பத், மிகவும் ஆதங்கத்துடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கூறியுள்ளதாவது, "நான் காலேஜ் படிச்ச காலத்தில் இருந்தே, பெரம்பூரில் தான் இருக்கேன். இப்பவும் அம்மா வீடு எனக்கு நார்த் மெட்ராஸ் தான். எப்பவுமே இங்க உள்ள வரும் போதே... ஒரு நல்ல வைப் இருக்கும், ஆனா இன்னைக்கு... இங்க உள்ள வரும்போது ரொம்ப பயமாவும், பயங்கரமாகவும் உணர்ந்தேன்.

இதற்கு காரணம் நேற்று இரவு நடந்த ஆம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலை சம்பவம் தான். இன்னைக்கு காலைல விடிந்ததில் இருந்து, சென்னை பாக்குறதுக்கே ரொம்ப பயமா இருக்கு. ஒரு தேசிய கட்சியின் தலைவரை அசால்ட்டாக இப்படி சிலர் வந்து வெட்டி போட்டுட்டு போயிருக்காங்க, இந்த தைரியம் எங்கிருந்து வந்தது?

Anitha Sampath emotional scary speech for Armstrong death mma

அல்ரெடி அவரை இழந்தாச்சு, அதுவே ரொம்ப அநியாயமான விஷயம். இதுக்கு அப்புறமும் எனக்கு தோன்ற விஷயம், இந்த கொலைக்காக ஒரு ஆறு பேர் போலீஸில் வந்து சரண்டர் ஆகி இருக்காங்க. அந்த ஆறு பேராவது உண்மையான குற்றவாளிகளா? அல்லது வேற யாரோ பிளான் பண்ணி வெட்டிட்டு இவங்கள சரண்டர் ஆக வச்சு இருக்காங்களான்னு பயம்மா இருக்கு! ஏதோ ஒரு கோவத்துல யாரையாவது வெட்டிட்டு போனா அது வேற கதை, ஆனால் இதை பிளான் பண்ணி செஞ்சிருக்காங்க. பெரிய ஆற்றல் இல்லாமல், ஒரு மிகப்பெரிய தொகையை கொடுக்காமல் இப்படி ஒரு தைரியம் யாருக்கும் வராது. கண்டிப்பா இது ஒரு பெரிய விஷயமா ஆகும்னு தெரியும் எனவே இதை பிளான் பண்ணி தான் செஞ்சிருக்காங்க.

தீபா குறித்து கார்த்திக்கு கிடைத்த தகவல்.! போன் காலால் கதி கலங்கும் ரம்யா - கார்த்திகை தீபம் வீகென்ட் அப்டேட்

மகாராஜா படத்தில் ஒரு குப்பைத்தொட்டி காணாமல் போனதாக வரும் காட்சியை குறிப்பிட்டு, நட்டி எல்லாருக்கும் போன் பண்ணி இந்த மாதிரி ஒரு கேஸ் இருக்கு இதுல நீ ஆஜராகுறியானு கேட்பாரு அப்படி ஒரு சாதாரணமான விஷயத்துக்கே, ஒரு சின்ன கேஸ்க்கு யாரும் கிடைக்கலனா, வேற யாரையோ ஒத்துக்க வைக்குறாங்க. ஆனா இவ்வளவு பெரிய கேசுக்கு பிளான் பண்ணி மர்டர் பண்ணி இருக்காங்கன்னா அதுக்கு கூட மற்ற ஆறு பேர் சரணாக வாய்ப்பு இருக்கிறது. அதனால இப்போ சரணடைந்திருப்பவர்களையும் நம்மால் நம்ம முடியாது.

Anitha Sampath emotional scary speech for Armstrong death mma

அதே போல் ஒரு கட்சியில் பெரிய பதவியில் இருக்கும் ஒருத்தருகே இந்த நிலைமை என்றால், சாதாரணமா வீட்ல இருக்கிறவங்க, குழந்தைகள வச்சுட்டு இருக்காங்க, வீட்ல இருக்குற வயசானவங்க எல்லாம் எப்படி வாழ்வாங்க. நாமெல்லாம் எப்படி வீட்ல நிம்மதியா வந்து வாழ முடியும். அதே போல் டெலிவரி பாய் வேடத்தில் வந்து இப்படி செய்துள்ளதால் எப்படி, இனி சாப்பாடு நம்பி ஆதார் செய்வது என கேள்வி மேல் கேள்வி எழுப்பி உள்ளார்.

என் மகளுக்கு ஆட்டிசம் இல்ல.. எக்கோலாலியா குறைபாடு! எப்படி என்றால் என்ன? விஜய் டிவி ஹீரோ அமித் பார்கவ் விளக்கம்

போலீசார் எலெக்ஷன் டைமில் பணம் எடுத்துட்டு போறீங்களா, லைசன்ஸ் இருக்கா, ஹெல்மெட் இருக்கானு துருவி துருவி சின்ன விஷயத்துக்கு கேக்குறாங்க. ஆன இப்படி பயங்கர ஆயித்ததோடு வரவங்கள விட்டுடுறாங்க. அதற்க்கு வீட்டில் இருப்பவர்களுக்கும், பெண்களுக்கும் துப்பாக்கி கொடுத்துடுங்க. ஒருவேலை மற்றொருவர் எங்களை சுட்டால் கூட, எங்களிடம் உள்ள துப்பாக்கியை கொண்டு உண்மையான கொலையாளியை நாங்கள் சுட்டால் அவர் தண்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இப்படி ஒருவரை கொலை செய்து சம்பாதிக்கும் பணத்தில் எப்படி சாப்பிட்டால் அது அவர்கள் உடலில் ஓட்டும் என கூறி ஆதங்கத்தை கொட்டியுள்ளார். இவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios