- Home
- Gallery
- தாய் பாசத்தை கொட்டி தீர்க்கும் முத்துப்பாண்டி.! சண்முகத்தை பிரியும் பரணி? அண்ணா சீரியல் அப்டேட்!
தாய் பாசத்தை கொட்டி தீர்க்கும் முத்துப்பாண்டி.! சண்முகத்தை பிரியும் பரணி? அண்ணா சீரியல் அப்டேட்!
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் பாக்கியத்தை குத்தியதும் முத்துப்பாண்டி இதுவரை இல்லாத அளவிற்கு உடைந்து அழுத நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, சௌந்தரபாண்டி இனிமே என் முகத்திலேயே முழிக்காத என்று பரணியை துரத்தி விட பாக்கியத்தை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்கின்றனர். சௌந்தரபாண்டி பாக்கியத்துக்கு ஏதாவது ஆகணும், அதையே காரணமா வச்சி அந்த ஷண்முகத்தையும் பரணியையும் பிரிச்சிடுவேன் என்று கணக்கு போடுகிறார்.
Anna Serial
அடுத்து ஹாஸ்பிடலில் பெரிய டாக்டர் இல்லை என்று அதிர்ச்சி கொடுக்க அழுது துடிக்கும் முத்துப்பாண்டி என் தங்கச்சியே டாக்டர் தான் என்று சொல்லி இசக்கியிடம் பரணிக்கு போன் போட்டு வர சொல்லு என்று சொல்ல சௌந்தரபாண்டி ஷாக்காகி அவ எதுக்கு என்று கேட்க முத்துப்பாண்டி நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க என்று ஆவேசப்படுகிறான்.
Anna serial
இதையடுத்து பரணி ஓடி வந்து அம்மாவுக்கு சிகிச்சை பார்த்து அவளை காப்பாற்ற மறுபக்கம் ஷண்முகம் கோவிலில் என் அம்மா மாதிரி இருந்த என் அத்தையையே குத்திட்டேன். இனிமே அருவாள் எடுக்க மாட்டேன். என் அத்தையை காப்பாத்திடு என்று வேண்டுகிறான், நைட்டெல்லாம் அப்படியே உட்கார்ந்து கடவுளை வேண்டியபடி இருக்கிறான்.
Anna Serial
இதை தொடர்ந்து பாக்கியம் கண் விழிக்க வெட்டுக்கிளி ஓடி வந்து ஷண்முகத்திடம் விஷயத்தை சொல்லி ஹாஸ்பிடல் அழைத்து செல்கிறான். பாக்கியத்தை பார்க்க வந்த ஷண்முகம் இனிமே எப்பவும் அரிவாள் எடுக்க மாட்டேன் என்று கண் கலங்கி அழுது மன்னிப்பு கேட்க பாக்கியம் நீ ஜெயிலுக்கு போக கூடாதுனு மட்டும் தான் நான் நினைச்சேன் என்று சொல்கிறாள்.
Anna Serial
பிறகு பாக்கியத்தை டிஸ்ஜார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்து செல்ல பரணி ஷண்முகத்திற்கு வேண்டா வெறுப்பாக சாப்பாடு போட அவன் சாப்பிடாமல் எழுந்து சென்று விடுகிறான். அதன் பிறகு பரணி தனது வீட்டிற்கு போன் செய்து என்னுடைய சர்டிபிகேட், பாஸ்போர்ட் எல்லாம் எடுத்திட்டு வாங்க, நான் அமெரிக்கா போக போறேன். இனிமே இவனோட வாழ முடியாது. இந்த வீட்டில் வாழ பிடிக்கல என்று அதிர்ச்சி கொடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.