பிரபல செய்தி வாசிப்பாளரும், பிக் பாஸ் போட்டியாளருமான அனிதா சம்பத் திருநங்கைகளுக்காக எடுத்துள்ள புதிய முயற்சிக்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இது குறித்த வீடியோவும் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

செய்தி வாசிப்பாளராக இருந்து, திரைப்படங்களிலும் செய்தி வாசிப்பாளராகவே தோன்றியவர் அனிதா சம்பத். நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான காப்பான், 2.ஓ ஆகிய படங்களில் இவர் செய்தி வாசிப்பாளராவே நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இதன் பின்னர், தமிழில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடினார். 

தமிழகத்தை சேர்ந்த ஒரு செய்தி வாசிப்பாளர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால், அனிதா சம்பத் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் போதே பலர் தொடர்ந்து தங்களின் ஆதரவை கொடுத்து வந்தனர். ஆனால் சில தினங்களிலேயே அனாவசியமான விஷயங்களுக்கு கோபப்பட்டு அழுது கொண்டே இருந்ததால் இவரது விளையாட்டு வெறுப்பு தட்டியது. அதே போல்... 50 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் வீட்டில் இருந்த அனிதா சம்பத் குறைவான வாக்குகளை பெற்று வெளியேறிய நிலையில், மீண்டும் விஜய் டிவியில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில்... ஷரிக்குடன் இணைந்து நடன திறமையை வெளிப்படுத்தினார்.

இவரது நடன திறமை அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. பிக்பாஸ் பட்டத்தை வெல்ல முடியவில்லை என்றாலும் அனிதா மற்றும் ஷரிக் இருவரும் பிக்பாஸ் ஜோடிகள் முதல் சீசனில் டைட்டில் வின்னராக மாறினர். அதே போல் சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினார். தன்னுடைய வெற்றி பயணத்திற்கு காரணம் கணவர் பிரபாகரன் தான் என, கூறும் அனிதா சம்பத் குடும்பத்தினரின் ஆதரவுடன் பல்வேறு நல்ல விஷயங்களையும் செய்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் அனிதா சம்பத் திருநங்கைகளுக்கு இலவச மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல் செமினார் எடுத்துள்ளார். இதில் பல ஊர்களை சேர்ந்த திருநங்கைகளும் கலந்து கொண்டு இலவச பயிற்சி பெற்றுள்ளனர். குறிப்பாக பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு முதல் வாரத்திலேயே வெளியேறிய நமிதா மாரிமுத்து மற்றும் நடிகை ஷகிலாவின் மகள் மிளா ஆகியோர் மாடலாக கலந்து கொண்டு மற்ற திருநங்கைகளை ஊக்குவித்துள்ளனர். இது குறித்த வீடியோ மற்றும் சில புகைப்படங்களை வெளியிட்டு அனிதா சம்பத் மிகவும் உருக்கமாக கூறியுள்ளதாவது... 

திருநங்கைகளுக்காக நான் நடத்திய "TRANS-FORM” - FREE ONEDAY MAKEUP & HAIRSTYLE SEMINAR” வெற்றிகரமாக முடிந்தது. பலரின் உதவியோடு மட்டுமே இது சாத்தியம் ஆச்சு.அவங்க எல்லாருக்கும் என் பெரிய நன்றிகள். இதை தொடர்ச்சியா செய்யணும், மேலும் பல திருநங்கைகளுக்கு இது உதவணும்ங்குறது தான் எங்க எல்லாருடைய ஆசையும்.

View post on Instagram

திருநங்கைகளில் நேர்மையா உழைச்சு சம்பாதிச்சு சுயமா வாழ நினைக்கும் எத்தனையோ பேர் இருக்காங்க. அவங்களுக்கு ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கணும் ங்குறதுதான் இந்த TRANS- FORM உடைய நோக்கம்
மதுரை, திருநெல்வேலி, திருவள்ளூர்,கோவை-னு பல வெளியூர்கள்ல இருந்தும் நிறைய பேரு கலந்துக்கிட்டாங்க இதுல சில பேரு வெற்றிகரமா மேக்கப் கலைஞர்களா ஜெயிச்சாலும் அத விட பெரிய சந்தோஷம் வேற எதுவும் இல்ல.

View post on Instagram