Asianet News TamilAsianet News Tamil

என்னடா நடக்குது..? முட்டிக்கொண்ட அனிதா சம்பத் - சுரேஷுடன் ஆடிய டூயட்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல தந்திரங்களோடு விளையாடி வரும் கடுமையான போட்டியாளராக உள்ளார் சுரேஷ் சக்கரவர்த்தி. இவருக்கு எதிராக பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் திரும்பினாலும், அதனை அசால்டாக டீல் செய்து வருகிறார். மேலும் இவரால் பலரது உண்மையான முகமும் அவ்வப்போது வெளியாகிறது என்றால் அது மறுக்க முடியாத உண்மை.
 

anitha sambath and suresh duet dance
Author
Chennai, First Published Oct 14, 2020, 12:09 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல தந்திரங்களோடு விளையாடி வரும் கடுமையான போட்டியாளராக உள்ளார் சுரேஷ் சக்கரவர்த்தி. இவருக்கு எதிராக பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் திரும்பினாலும், அதனை அசால்டாக டீல் செய்து வருகிறார். மேலும் இவரால் பலரது உண்மையான முகமும் அவ்வப்போது வெளியாகிறது என்றால் அது மறுக்க முடியாத உண்மை.

குறிப்பாக செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்திற்கும், சுரேஷுக்கு ஆரம்பத்தில் இருந்தே ஒத்துவராது. அனிதா சம்பத்தால் தான் கடந்த வாரம் சமையல் டீமில் இருந்து இவர் வெளியேறி டாய்லெட் அணிக்கு சென்றார். கமல்ஹாசன் முன்னிலையில் இவர்கள் பிரச்சனை தீர்க்கப்பட்டாலும், அனிதா கொஞ்சம் காண்டாகவே தான் சுற்றி கொண்டிருந்தார்.

anitha sambath and suresh duet dance

நேற்றைய தினம் கூட இனி என்னை பற்றி நீங்கள் பேசாதீர்கள், உங்களை பற்றி நான் பேச மாட்டேன் என வீர வசனம் எல்லாம் பேசி விட்டு இன்று சுரேஷுடன் இணைந்து "சின்ன மச்சான்" டூயட் பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ளதை பார்க்கும் போது  ரசிகர்களையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

anitha sambath and suresh duet dance

அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள முதல் புரோமோவில், பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க்கில் அனிதா மற்றும் சுரேஷ் ஆகிய இருவரும் டூயட் ஆடுகின்றனர். ஏய் ஏய் சின்ன மச்சான், செவத்த மச்சான் என்ற பாடலை அனிதா மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி  ஆடி வரும்போது, மற்ற போட்டியாளர்கள் இவர்களை கை தட்டி ஊக்குவிக்கிறார்கள். இந்த காட்சியை பார்க்கும் போது, எலியும் பூனையுமாக சண்டை போட்டு கொண்டிருந்தவர்கள் சமாதானம் ஆகிவிட்டார்களோ என்று தோன்றுகிறது. 

anitha sambath and suresh duet dance

எது எப்படி இருந்தாலும், இந்த புரோமோவை வைத்து பார்க்கையில் இன்றைய தினம் ஜாலியாக நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios