விஷால், அனிஷா அல்லா ரெட்டி தனது சமூக வலைதளப்பாக்கத்திலிருந்த விஷாலோடு நிச்சயதார்த்த போட்டோக்களை நின்றுவிட்டதால் கல்யாணம் நின்று விட்டதாக பேச்சு கிளம்பிய நிலையில் விஷாலுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி ட்விஸ்ட் வைத்துள்ளார் அனிஷா.

தெலுங்கு நடிகையான அனிஷா அல்லா ரெட்டியை பார்த்ததும் காதலில் விழுந்ததாக தெரிவித்தார் விஷால். விஷால் திருமணம் செய்து கொள்ள இருந்த அனிஷா, ஆந்திர தொழிலதிபரின் மகள் ஆவார். அமெரிக்காவில் பட்டப்படிப்பு முடித்துள்ள அவர், விஜய் தேவரகொண்டா நடித்த அர்ஜுன்ரெட்டி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர்களுக்கு ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நிச்சயதார்த்தம் எல்லாம் நடந்தது. விஷாலும், அனிஷாவும் ஒருவரையொருவர் பாராட்டி சமூக வலைதளங்களில் போஸ்ட் போட்டார்கள். அதை பார்த்து விஷால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். அவர்களின் திருமணம் அக்டோபர் மாதம் நடக்கும் என்று நிச்சயிக்கப்பட்டது. 

ஆனால் இரண்டு பக்கமும் கல்யாண வேலையை துவங்க ஆர்வம் காட்டவில்லை என சொல்லப்பட்டது. இதனால் கல்யாணம் நின்று போனதாக என்று பேச்சு கிளம்பியுள்ளது. இந்நிலையில், மணப்பெண் அனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த விஷால் புகைப்படங்கள், நிச்சயதார்த்த புகைப்படங்கள் அனைத்தையும் டெலீட் செய்துள்ளார். விஷாலும், தானும் எந்த விதத்திலும் தொடர்பில்லை என சொல்லும் அளவிற்கு எந்த ஆதாரமும் இல்லாத அளவிற்கு இன்ஸ்டாகிராம் கணக்கை மாற்றியுள்ளார் அனிஷா. இந்த செயலால் கல்யாணம் திருமணம் நின்றுவிட்டது என்ற பேச்சு கோலிவுட்டில் காதுப்படவே பேசினார்கள்.

திருமண விவகாரம் பற்றி இருவீட்டாரும் இதுவரை எதுவும் மறுப்போ, அல்லது உண்மைதான் என்றோ என இதுவரை சொல்லவில்லை. விஷால் கூட படங்களில் பிசியாக நடித்து வருகிறார். விஷால், அனிஷா இடையே லவ் வலுவாக இருந்த நிலையில் என்ன ஆச்சு? திருமணம் நின்றுவிட்டதா? அனிஷா ஏன் விஷாலின் புகைப்படங்களை எல்லாம் நீக்கினார்?  விடை தெரியாத மர்மமாகவே நீடித்த நிலையில்விஷாலுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி ட்விஸ்ட் வைத்துள்ளார் அனிஷா அல்லா ரெட்டி,  இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  தான் விஷாலுடன் சேர்ந்து இருக்கும் போட்டோ போட்டு விஷாலுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள அவர் பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஸ்டார். ஜொலிப்பதற்காக பிறந்தவர் நீங்கள் என்று அனிஷா வாழ்த்தியுள்ளார்.  

நடிகர் சங்க கட்டிடத்தில் தான் திருமணத்தை நடத்த வேண்டும் என்று விஷாலும், ஹைதராபாத்தில் நடத்த வேண்டும் என்று பெண் வீட்டாரும் ஆடம் பிடிப்பதால் பிரச்சனை ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் அனிஷா விஷாலை வாழ்த்தியதை பார்த்தால் கல்யாணம் நிற்கவில்லை என அப்பட்டமாக தெரிகிறது. விஷால், அனிஷாவுக்கு அக்டோபர் மாதம் 9ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமண பத்திரிகை இன்னும் அடிக்கப்படவில்லை. திருமண வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக கோடம்பாக்கத்தில் காதுப்படவே பேசிக் கொள்கிறார்கள்.