3 திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத் முதல் படத்தின் இசையிலேயே அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தார். இதைத்தொடர்ந்து அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படங்களிலும் இசையமைத்து அனைவருடைய பாராட்டையும் பெற்றார். 

ஆல்பம்:

இவருடைய இசைக்கு எந்த அளவிற்க்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்ப்பு கிடைத்ததோ... அதையும் தாண்டி இவர் வெளியிட்ட ஆல்பம் பாடல்களும் ரசிகர்களை கவர்ந்தது. 

நீண்ட நாள் கனவு:

அஜித், விஜய், சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்கள் படங்களுக்கு இசையமைத்த இவரின் நீண்ட நாள் கனவு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்பது தான்... இந்த கனவு தற்போது நிஜமாகி உள்ளது. ரஜினிகாந்த் அடுத்ததாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் , இந்த படத்தில் இசையமைப்பாளராக கமிட் ஆகியுள்ளார் அனிருத். மேலும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது குறிப்ப்பிடத்தக்கது.

நடிப்பு:

இதுவரை ஆல்பம் பாடல்களில் மட்டுமே தன்னுடைய முகத்தை காட்டி வந்த இவர் விரைவில் நடிகராகவும் திரைத்துறையில் கால் பதிக்க உள்ளார். 

பெண் வேடத்தில் அனிருத்:

இந்நிலையில் தற்போது அனிருத்  பெண் கெட்டப்பில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. அந்த புகைப்படத்தில் இருப்பது இசையமைப்பாளர் அனிருத், அப்படியே அச்சு அசலாக பெண் போன்றே இருக்கிறார். ஒருவேளை இந்த புகைப்படம் அவர் நடிக்க இருக்கும் படத்திற்காக எடுக்கப்பட்டதாக இருக்கலாம் என கூறப்படுகிறது. 

அந்த புகைப்படம் இதோ: