இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய இருவரின் சாதனைகளை எட்டும் விதத்தில் ஒரே நேரத்தில் கமல், மற்றும் ரஜினி படங்களுக்கு இசையமைக்கும் அதிர்ஷ்டத்துக்குச் சொந்தக்காரராகியிருக்கிறார்  இளம் இசையமைப்பாளர் அனிருத்.

ஏற்கனவே ரஜினியின் ‘பேட்ட’ படத்துக்கு இசையமைத்த அனிருத் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு ஷங்கர், கமல் காம்பினேஷனின் ;இந்தியன் 2’ படத்தில் ஒப்பந்தமாகி அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கினார். இந்நிலையில் ரஜினி முருகதாஸ் இணையும் அடுத்த படத்துக்கும் அனிருத் தான் இசையமைப்பாளர் என்று செய்திகள் வலம் வந்த நிலையில், அதை இயக்குநரோ, தயாரிப்பாளர் தரப்போ உறுதி செய்யவில்லை. 

கமலின் ‘இந்தியன் 2’ படத்துக்கு அனிருத்தே இசையமைப்பதால் ரஜினி படத்துக்கு அநேகமாக அனிருத் கமிட் ஆக வாய்ப்பில்லை என்று கூட சில செய்திகள் நடமாடி வந்த நிலையில், நேற்று இரவு ‘நானே ரஜினி முருகதாஸ் காம்பினேஷன் படத்துக்கும் இசையமைக்கிறேன்’ என்று உரக்க அறிவித்தார் அனிருத்.

இதற்கு முன்  50 க்கும் மேற்பட்ட தருணங்களில் இளையராஜாவும் ஓரிருமுறை ஏ.ஆர்.ரஹ்மானும் ஒரே நேரத்தில் ரஜினி கமல் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்கள். ரஜினியின் இப்படம் மார்ச் மாதம்  தொடங்கவுருக்கிறது . ரஜினியுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்துக்காக ரஜினி 45 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளார்.