ஒவ்வொரு ஆண்டும் காதலர் தின ஸ்பெசலாக தன்னுடைய புதிய பாடல் ஒன்றை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத். அதே போல் இந்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று தான் இசையமைத்துள்ள 'ஜெர்ஸி' படத்தில் இடம் பெற்றுள்ள 'மறக்கவில்லையே' என்ற பாடலை வெளியிட்டுள்ளார். இந்த பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். 

நானி - ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ள இந்தபடம் ஏப்ரல் 19-ந்தேதி தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.