கோலிவுட்டில் கலக்கி வரும் இளம் இசையமைப்பாளர்களில் ஒருவர், அனிருத். இவருக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளதோ அதே போல் இவரை பற்றி பரவும் சர்ச்சைகளுக்கும் குறைவே இல்லை.

பல சர்ச்சைகளில் இவர் தொடர்ந்து சிக்குவாதல் தான் இவருடன் இருந்த நட்பையும் தனுஷ் முறித்துக்கொண்டார் என்று கூறப்படுகிறது.

தனுஷ் இவருடன் பேசாமல் இருந்தாலும், தன்னை 3 திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய நன்றியை மறவாமல் தொடர்ந்து தனுஷ் உடனான நட்பை புதுப்பிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்நிலையில் அனிருத்திற்கு அவருடைய வீட்டில் பெண் பார்க்கும் படலம் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், ஒருவழியாக பெண்  பார்த்துவிட்டதாக கூறப்படுகின்றது, அந்த பெண் தீவிர அனிருத் ரசிகராம்.

மேலும், மிகப்பெரிய  பணக்கார குடும்பத்தை சேர்ந்த  பெண் என கிசுகிசுக்கப்படுகின்றது, இந்தாண்டே திருமணம் நடக்கவுள்ளதாகவும் 
அந்த பெண் ஒரு நகைக்கடை ஓனரின் மகள் என கூறப்படுகின்றது. இதிலிருந்து சந்தோஷமாக தன்னுடைய வாழ்நாளை கழித்து வந்த அனிருத் புது மாப்பிள்ளை வேடம் போடா ரெடி ஆகிவிட்டார்.