3 படத்தின் மூலம் இளம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் அனிருத். இந்த படத்தில் இடம் பெற்றகொலவெறி பாடல் மூலம் உலகப்புகழ் பெற்றார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் போதே இசையமைக்க தொடங்கி தற்போது விஜய் அஜித் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு இசையமைக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறார்.

இந்நிலையில் அவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்து அவரது பெற்றோர் பெண் பார்க்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்களாம்.

அனிருத், இது வரை யார் காதல் வலையிலும் சிக்காததால் தனக்கு தகுந்த பெண்ணை தேர்வு செய்யும் உரிமையை தன் பெற்றோரிடமே விட்டுவிட்டாராம். 

இந்த செய்தியால் அனிருத்தின் பெண் ரசிகைகள் அதிர்ச்சியாகியுள்ளார்களாம். கைவசம் பல படங்களை வைத்துள்ள அனிருத் தற்போது தல57 படத்தின் பாடல்களை கம்போஸ் செய்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது .