'வடசென்னை' படத்தை தொடர்ந்து, தற்போது தனுஷ் 'அசுரன்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த  படத்தின் மூலம் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியார் தனுஷுக்கு ஜோடியாக அறிமுகமாகிறார். பிரபல நடிகர் கருணாஸின் மகனும் இந்த படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை, தனுஷின் ஆஸ்தான இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வருகிறார். 

இந்நிலையில், தனுஷின் பிறந்த நாள் வரும் ஜூலை 28 தேதி, வரபோகும் நிலையில், பிரபல இசையமைப்பாளரும், தனுஷின் குடும்ப நண்பருமான, அனிருத் 'அசுரன்' கெட்டப் புகைப்படத்தை கொண்ட காமன் டிபி ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை தனுஷ் ரசிகர்கள் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்கள். அதிலும் இந்த டிபி-ல் எங்கள் தலைவா என குறிப்பிட்டுள்ளதால் ரசிகர்கள் வேற லெவலில் வரவேறு, தனுஷின் பிறந்த நாள் கொண்டாததை இப்போதே துவங்கி விட்டனர்.