Anirudh dedicated vivegam songs to 25 years of Ajith cinema life

25 ஆண்டுகால அஜித்தின் சினிமா வாழ்க்கைக்கு விவேகம் பாடல்கள் சம்பர்ப்பணம் என்று விவேகம் படத்தின் இசையமைப்பாளர் அனிரூத் டிவிட்டியுள்ளார்.

அஜித் குமார், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விவேகம்’.

சிவா இயக்கியுள்ள இப்படத்தை இதனை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்திற்கு கபிலன் வைரமுத்து, விவேகா, யோகி பி, சிவா, ராஜ குமாரி உள்ளிட்டோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.

சர்வைவா, தலை விடுதலை, காதலாடா ஆகிய பாடல்களின் சிங்கிள் டிராக் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படத்தின் அனைத்து பாடல்களும் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அனிருத் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், “தல அஜித்தின் 25 ஆண்டுகால சினிமா வாழ்க்கைக்கு படத்தின் பாடல்கள் சமர்ப்பணம்” என்று தெரிவித்துள்ளார்.