சென்னை சேப்பாக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் போட்டுக்கு முன் இசையமைப்பாளர் அனிருத் இசைக்கச்சேரி நடத்த உள்ளார்.
Anirudh Concert in Chepauk Before CSK vs MI IPL Match : உலகில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடராக ஐபிஎல் விளங்கி வருகிறது. ஐபிஎல் தொடர் ஆரம்பமாகி 18 வருடம் ஆகிறது. அந்த தொடரின் 18வது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்த சீசனில் முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. இப்போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் பெங்களூரு அணி அதிரடியாக விளையாடி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சிஎஸ்கே vs மும்பை இந்தியன்ஸ் மோதல்
இந்த நிலையில், ஐபிஎல் தொடரின் 2வது நாளான இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இதில் மதியம் 3 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரிட்சை நடத்த உள்ளன. இதையடுத்து இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ளது. இப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இதையும் படியுங்கள்... CSK vs MI: சிஎஸ்கேவின் மெயின் பிரச்சனையே இதுதான்! இதை சரி செய்தால் கப் கன்பார்ம்!
அனிருத் இசை நிகழ்ச்சி
இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றால் எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்குமோ அதே அளவிலான எதிர்பார்ப்பு சென்னை - மும்பை அணிகள் ஐபிஎல்லில் மோதும்போது இருக்கும். இந்த போட்டி தொடங்கும் முன் சேப்பாக்கத்தில் ரசிகர்களுக்கு இசை விருந்து காத்திருக்கிறதாம். அதன்படி இன்று மாலை சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டம் தொடங்கும் முன்னர் இசையமைப்பாளர் அனிருத்தின் இசைக்கச்சேரி நடைபெற உள்ளதாம்.
என்னென்ன பாடல்கள் பாட உள்ளார் அனிருத்?
இன்று மாலை 6.30 மணி முதல் 7 மணி வரை சுமார் 30 நிமிடங்கள் நடைபெற உள்ள இந்த இசைக் கச்சேரியில் விஜய்யின் லியோ படத்தில் இடம்பெற்ற பேட் ஆஸ் பாடல், ரஜினியின் ஜெயிலர் படத்தில் வரும் ஹுகும் பாடல் உள்பட பல்வேறு மாஸ் பாடல்களை பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்த ரெடியாகி வருகிறார் அனிருத். இதற்காக அவர் நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் ரிகர்சல் செய்திருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இதையும் படியுங்கள்... CSK vs MI Head to Head: அட! சேப்பாக்கத்தில் மும்பை இவ்வளவு மேட்ச் ஜெயிச்சிருக்கா!
