3 படத்தின் மூலம் இளம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் அனிருத். இந்த படத்தில் இடம் பெற்றகொலவெறி பாடல் மூலம் உலகப்புகழ் பெற்றார். 

கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் போதே இசையமைக்க தொடங்கிய அனிருத், தற்போது விஜய், அஜித், ரஜினி  போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு இசையமைக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறார்.  இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டமும் ஒரு பக்கம் உள்ளது.

ஏற்கனவே, நடிகை ஆண்ட்ரியாவின் காதல் கிசுகிசுவில் சிக்கி, சில முத்த புகைப்படங்கள் வெளியான நிலையில், இவர்களுக்குள் பிரேக் அப் ஆனதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சில வருடங்களாக சிங்கிலாகவே சுற்றி வந்த அனிருத்துக்கு,  திருமணம் செய்ய முடிவு செய்து அவரது பெற்றோர்  பெண் பார்க்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வந்ததாகவும் தகவல் வெளியாகி வந்தது.

மேலும் அனிருத், இதுவரை யார் காதல் வலையிலும் சிக்காததால் தனக்கு தகுந்த பெண்ணை தேர்வு செய்யும் உரிமையை தன் பெற்றோரிடமே விட்டுவிட்டதாகவும் நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தது. 

இந்நிலையில் தற்போது அனிருத் பிரபல பாடகி ஒருவரை காதலிப்பதாக கூறப்படுகிறது. பாடகர் அனிருத்துடன், டாக்டர் படத்தின் செல்லம்மா பாடலை இணைந்து பாடிய பாடகி ஜோனிடா காந்தி என்பவரை தான் தற்போது அனிருத் காதலிப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் வதந்தி என்றும் சில கூறுகிறார்கள். எது எப்படி இருந்தாலும் விரைவில் இது குறித்து அனிருத் தரப்பில் இருந்து உண்மையான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.