Anikha surendran :  ‘வாசுவின் கர்ப்பிணிகள்’ படத்தை ஜிவி பிரகாஷ் நடித்த பென்சில் படத்தை இயக்கிய இயக்குனர் மணி நாகராஜ் தான் இயக்கி உள்ளார். 

நடிகர் விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான மாஸ்டர் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் சேவியர் பிரிட்டோ. மாஸ்டர் படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியை பெற்றது. நடிகர் விஜய்யின் உறவினரான சேவியர் பிரிட்டோ மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின் பல்வேறு படங்களை தயாரித்து வருகிறார்.

அதில் ஒரு படம் தான் ‘வாசுவின் கர்ப்பிணிகள்’. இப்படத்தை ஜிவி பிரகாஷ் நடித்த பென்சில் படத்தை இயக்கிய இயக்குனர் மணி நாகராஜ் தான் இயக்கி உள்ளார். இப்படத்தில் நீயா நானா கோபிநாத், நடிகைகள் வனிதா, லீனா குமார், சீதா, சுஜா வருணி, விஸ்வாசம் பட நடிகை அனிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ‘வாசுவின் கர்ப்பிணிகள்’ படத்தின் போஸ்ட்ர் ஒன்று வெளியாகி சமூக வலைதளங்கள் சர்ச்சையை கிளப்பி உள்ளது. அந்த போஸ்டரில் நடிகைகள் வனிதா, அனிகா ஆகியோர் கர்ப்பாமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. 

நடிகை அனிகா, 17 வயதிலேயே கர்ப்பணிப் பெண்ணாக நடித்துள்ளதை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர். இப்படத்தில் நடிகர் கோபிநாத் மருத்துவராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் ரிலீசாகும் போது சர்ச்சையை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... Indian 2 : ரெட் ஜெயண்ட் வசம் செல்கிறதா இந்தியன் 2?... உதயநிதியின் திடீர் அப்டேட்டால் ரசிகர்கள் குழப்பம்