டிகை கஸ்தூரி பிக்பாஸ் வீட்டிற்குள், வயல் கார்டு சுற்று மூலம் உள்ளே நுழைந்து ஓரிரு தினங்களே ஆன நிலையில், நடிகர் கமலஹாசன் கஸ்தூரியிடம் தொகுப்பாளராக பேசும் காட்சி தற்போது ப்ரோமோவில் வெளியாகியுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், கஸ்தூரியை வைத்து கமல் ஒரு விளையாட்டை தயார் செய்கிறார்.

அதாவது, இந்த வீட்டில் வில்லன் - ஹீரோ யார் என நீங்கள் நினைக்கிறீர்கள் என கூறி, மேசை மீது வைத்துள்ள ஒரு ரோஜா பூ மாலையை ஹீரோ யார் என தேர்வு செய்து அவருடைய கழுத்தில் போட சொல்கிறார்.

இதற்க்கு கஸ்தூரி.... தர்ஷன் மற்றும் ஷெரீனை அழைத்து, இவர்கள் இருவரும் இந்த மாலையை போட்டு கொண்டால் நன்றாக இருக்கும் என்றும், தர்ஷனுக்கு, ஷெரின் ஹீரோயின், ஷெரீனுக்கு தர்ஷன் ஹீரோ என கூறுகிறார். இதற்கு கமல் ... இதுவரைக்கும் உங்க ஹீரோ யார் என கூறவில்லை என்றவுடன், என்னுடைய ஹீரோ நீங்கள் தான் என கமலை பார்த்து சொல்ல அவரோ... நீங்கள் இங்கிருந்து போகும் போது மாலையோடு அனுப்பி வைக்கிறேன் என கூறுகிறார்.

இந்த ப்ரோமோ இதோ...