புதிய பரிமாணம் எடுத்ததில் மகிழ்ச்சி.. கொஞ்ச காலத்துக்கு நான் வில்லன் இல்ல - அர்ஜூன்தாஸ் பேட்டி! வீடியோ!

கைதி, மாஸ்டர் படத்தில் நடித்த அர்ஜுன் தாஸ், தற்போது நடிகை துஷாரா விஜயனுடன்,நடித்த அநீதி படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று ஓடி வருகிறது.இந்நிலையில்  கோவை அவினாசி சாலையில் உள்ள பிராட் வே சினிமாஸ் தியேட்டருக்கு வந்த அநீதி பட நாயகன் அர்ஜூன் தாஸ்,நாயகி துஷாரா விஜயன் ரசிகர்களை நேரில் சந்தித்தனர்.

Aneethi Movie Team Press meet actor Arjun Dass shared about his future films

வெயில், அங்காடித்தெரு, அரவான், காவியத் தலைவன் போன்ற பல சிறந்த திரைப்படங்களை தமிழ் திரையுலகிற்கு கொடுத்தவர் தான் வசந்தபாலன். இவர் இயக்கிய வெயில் திரைப்படத்திற்காக அவருக்கு  தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இந்த 2023ம் ஆண்டு அவருடைய இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் தான் அநீதி. திரைப்படத்தில் அர்ஜுன்தாஸ் ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார், மேலும் வனிதா விஜயகுமார், பரணி, காலி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

சாதி வெறி பிடித்தவனை சகட்டுமேனிக்கு கொண்டாடும் நெட்டிசன்கள்... மாரி செல்வராஜுக்கு தலைவலியாக மாறிய பகத் பாசில்

கடந்த ஜூலை 21ம் தேதி உலக அளவில் வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் பட குழுவினர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர் அப்பொழுது பேசிய நடிகர் அர்ஜுன் தாஸ், மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் வசந்த பாலனுடன் நடிக்க ஆர்வமாக இருப்பதாக கூறியுள்ளார். 

மேலும் அவர் தொடர்ச்சியாக பல படங்களில் கமிட் ஆகியுள்ள நிலையில், அவைகளில் வில்லன் கதாபாத்திரம் அல்லாமல் ஒரு பாசிட்டிவ்வான கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக அவர் கூறியிருக்கிறார். அவர் OG என்ற தெலுங்கு திரைப்படத்திலும் நடித்த வருவது குறிப்பிடத்தக்கது. 

படத்தின் நாயகி துஷாரா விஜயன் பா. ரஞ்சித்தின் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் புகழ் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அநீதி படத்திற்கு பிறகு தனுஷ் அவர்களுடைய 50-வது திரைப்படத்தில் அவர் நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திரையுலகில் 30 ஆண்டுகால பயணம்.. "ஜென்டில் மேன்" சங்கருக்கு குவியும் வாழ்த்து - மகள் அதிதி போட்ட போஸ்ட்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios