கல்லூரி கலை நிகழ்ச்சி ஒன்றுக்கு சிறப்பு விருந்தினராகச் சென்றிருந்த நடிகை ஆண்ட்ரியா உள்ளாடைகள் தெரியும்படி மிகக் கவர்ச்சியாக உடை அணிந்து சென்றது வலைதளங்களில் பரபரப்பாகி வருகிறது. முகநூல் உட்பட்ட வலைதளங்களில் கல்லூரி நிர்வாகத்தை பொதுமக்கள் பயங்கரமாக கிண்டலடித்து வருகின்றனர்.சமீபகாலமாக தமிழ்ப் படங்களில் நடிப்பதை வெகுவாகக் குறைத்துக்கொண்ட ஆண்ட்ரியா கடைசியாக வெற்றிமாறனின் ‘வடசென்னை’ படத்தில் அரைநிர்வாணமாக நடித்து பரபரப்பை உண்டாக்கினார். பொதுவாகவே அவரது ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் கொஞ்சமும் தயங்காமல் தனது கால், அரை,முக்கால் நிர்வாணப் படங்களை பகிர்வதற்கு கொஞ்சமும் தயக்கம் காட்டாதவர் ஆண்டிரியா.

சமீபத்தில் வி ஐ டி கல்லூரியின் கலை நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்றிருந்தார் ஆண்ட்ரியா. அப்போது உள்ளாடை தெரியும் அளவிற்கு படு கவர்ச்சியான உடையில் சென்றிருந்தார். மாணவர்கள் மத்தியில் சிறிதுநேரம் உரையாடி, சில பாடல்களையும் பாடி உற்சாகப்படுத்திவிட்டுச்சென்றார் ஆண்ட்ரியா.

 இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம், ட்விட்டர் பக்கங்களில் ஆண்டிரியா வழக்கம்போல் அப்படங்களைப் பகிரவே, மாணவர்கள் படிக்கும் கல்லூரி நிகழ்ச்சிக்காவது கொஞ்சம் நாகரிகமாக உடை உடுத்திச் செல்லக்கூடாதா?  கல்லூரிக்கு சென்றால் கூட இப்படித்தான் கவர்ச்சிப் படத்துக்கு ஆடை அணிவது போல் ஆடை அணிந்து செல்வதா என்று வறுத்தெடுத்து வருகின்றனர்.