அமீர்:

'மௌனம் பேசியதே' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அனைவராலும் அறியப்பட்டவர் அமீர், இவர் இயக்குனராக உருவெடுக்கும் முன்பே, நடிகர் விக்ரமுக்கு திருப்பு முனையாக அமைந்த 'சேது' படத்தில் நடிகராக அறிமுகமானவர். 

மௌனம் பேசியதே படத்தை தொடந்து இவருடைய இயக்கத்தில் வெளிவந்த ராம், பருத்திவீரன், உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

வடசென்னை:

தற்போது இவர், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வரும் 'வடசென்னை' படத்தில் தாதா வேடத்தில் நடித்து வருகிறார் அமீர். இவருக்கு ஜோடியாக நடிகை ஆண்ட்ரியா நடித்து வருகிறாராம். 

மேலும் ஆண்ட்ரியா இந்த படத்தில் முதல் முறையாக ஸ்லம் ஏரியா பெண்ணாக நடிகிறாராம். இதற்காக பயிற்சியும் மேற்கொண்டு வருகிறாராம். 

மற்றொரு நாயகி:

நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடித்து வரும் இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இவருக்கு ஜோடியாக நடிப்பதாகவும், அமீருக்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடித்து வருகிறார். இந்த படத்தில் தாதாவாக நடிக்கும் அமீரின் சிஷ்யன் தான் தனுஷாம்... அமீரை தொடர்ந்து தனுஷ் தாதாவாக எப்படி உருவெடுக்கிறார் என்பது தான் இந்த படத்தின் கதையாம்.