தரமணி படத்திற்கு பிறகு தன் மார்க்கெட்டை சிமெண்ட் ஜல்லி கொட்டி சரி செய்திருக்க வேண்டிய ஆன்ட்ரியா, வந்ததும் பழமில்லை, போனதும் கிழம் இல்லை என்கிற சிந்தனைக்கு போய்விட்டார்.

வெற்றியை கொண்டாடாத ஆன்ட்ரியாவை வெற்றி மட்டும் சீண்டுமா என்ன? அதற்கப்புறம் அடங்கிக் கிடந்த ஆன்ட்ரியா திடீர் ஆவேசமாகி படங்களில் கமிட்டாகி வருகிறார். அவ்வப்போது ஸ்டேஜ் ஷோவும் செய்து வருகிறார். இப்போது விஜய் 64 படத்தில் அவருக்கு முக்கிய ரோல் வழங்கப்பட்டுள்ளது. தன்னை அணுகிய லோகேஷ் கனகராஜிடம், கதை கூட கேட்க மாட்டேன். உங்க மேல நம்பிக்கை இருக்கு என்றாராம்.

அது ஒருபுறமிருக்கட்டும், பெங்களூருவில் நடைபெற்ற ஒரு விழாவில் ’’திருமணமான ஒருவருடன் வாழ்ந்து வந்ததாகவும் அவர் தன்னை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறுத்தியதாகவும் அதன்பின் ஆயுர்வேத சிகிச்சை எடுத்து மீண்டுவந்ததாகவும் தெரிவித்தார். அவர் யார் என்பதை தான் எழுதியுள்ள ‘புரோக்கன் விங்’ என்ற கவிதைப் புத்தகம் வெளியாகும்போது தெரியவரும் என்று கூறியிருந்தார். ஆனால் புத்தகம் இன்னும் வெளியாகவே இல்லை.  

ஆன்ட்ரியா சேர்ந்து வாழ்ந்ததாக சொன்ன அந்த நபர் ஓர் அரசியல் வாரிசு நடிகர் என்ற தகவல் மட்டும் சமூக வலைத்தளங்களில் பரவியது. சினிமாவிலிருந்து அரசியலுக்குச் சென்ற நடிகரா அல்லது அரசியலில் இருந்து சினிமாவுக்குச் சென்ற நடிகரா என சமூக வலைத்தளங்களில் பலரும் பலவிதமாக கேள்வி கேட்டு வருகிறார்கள். அந்த கேள்வி இப்போதும் எழுந்து வருகிறது. ஆமாம் அந்தப்புத்தகம் வெளியாகுமா? வெளியாகாதா ஆண்ட்ரியா..?