’திருமணமான பிரபல நடிகர் என்னை உடல்ரீதியாக கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார். அவர் பெயரை விரைவில் வெளியிடுவேன்’ என்ற அறிவிப்போடு காணாமல் போன நடிகை ஆண்ட்ரியா ‘தளபதி 64’படத்தில் இன்னொரு நாயகியாக கமிட் ஆகவிருப்பதாக அப்படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

‘கைதி’பட இயக்குநர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் விஜய் அடுத்து நடித்து வரும் ‘தளபதி 64’படத்தின் படப்பிடிப்பு துவங்கி சுமார் மூன்று வாரங்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. விஜய் சேதுபதி வில்லனாகவும் சாந்தனு பாக்கியராஜ், மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில் மலையாள நடிகை மாளவிகா மோகனன் நாயகி வேடத்தில் நடிக்க ஏற்கனவே ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் இப்படத்தில் இரு கதாநாயகிகள் வேடம் இருப்பதாகவும் அதில் மாளவிகா மோகனனுக்கு அடுத்த கேரக்டரில் நடிக்க தயாரிப்பு தரப்பு ஆண்ட்ரியாவை அணுகியிருப்பதாகவும் தெரிகிறது. சமீபத்தில் மாபெரும் சர்ச்சை ஒன்றை தனக்குத்தானே இழுத்துக்கொண்ட நடிகை ஆண்ட்ரியா தன்னை திருமணமான ஒரு நடிகர் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகவும் அதனால் தனது உடல்நிலை மிகவும் மோசமடைந்து பின்னர் சிகிச்சை மேற்கொண்டு குணமடைந்ததாகவும் தெரிவித்திருந்தார். அதே சமயம் அவர் பெயரை மிக விரைவில் வெளியிடப்போவதாக ஒரு தேதியும் குறித்திருந்தார். ஆனால் என்ன காரணத்தாலோ அந்த இளைஞர் பெயரை அவர் வெளியிடவில்லை. விஜய் படத்தில் கமிட் ஆன பிறகாவது வெளியிடுவாரா என்று காத்திருப்போம்.