நேற்றைய தினம் நடிகர் சூரி, இரவு பகல் பாராமல், மக்களுக்காக வேலை செய்து வரும், காவலர்களுக்கு தன்னுடைய நன்றியை தெரிவிக்கும் விதமாக, சென்னையில் உள்ள D1 காவல் நிலையம், அண்ணா சாலை, Triplicane ஆகிய இடங்களில் அமைந்துள்ள காவல் நிலையங்களுக்கு சென்று, அங்கு பணியில் இருந்த காவலர்களுக்கு வாழ்த்து தெரிவித்து அவர்களிடம் ஆட்டோகிராப் பெற்றார்.

மேலும் சினிமாவில் மட்டுமே நாங்கள் ஹீரோக்கள், உண்மையில் மக்கள் உயிரை காப்பாற்றி வரும், மருத்துவர்களும், காவலர்களும், துப்புரவு பணியை மேற்கொண்டு வருபவர்கள் தான் நிஜ ஹீரோக்கள் என புகழ்ந்தார்.

இவரை தொடர்ந்து, தற்போது நடிகை ஆண்ரியா மக்கள் பணியில் ஈடுபட்டுள்ளவர்களை நிஜ ஹீரோக்கள் என தன்னுடைய பாட்டின் மூலம் அவர்களுக்கு தன்னுடைய நன்றிகளை தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில், இந்த கொடூர வைரசியிடம் இருந்து மக்களை காப்பற்ற அரசு சார்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் ஒவ்வொரு உயிரையும் காப்பாற்ற மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் குறிப்பாக காவல் துறையினர் என அனைவரும் பாடுபட்டு வருகிறார்கள்.

இவர்களுக்கு தன்னுடைய உள்ளம் கணித நன்றியை ’யூ ஆர் தி ரியல் ஹீரோ’ என்ற பாட்டை பாடி தெரிவித்துள்ளார் ஆண்ட்ரியா, மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், ’போலீசாராகிய நீங்கள் நாட்டிற்காகவும் நகரத்திற்காகவும் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து வருகின்றீர்கள். உங்களுக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். நீங்கள் செய்யும் பணிக்கு மிகப்பெரிய நன்றி. தயவு செய்து யாரும் நம்பிக்கை இழக்க வேண்டாம்.  விரைவில் எல்லாம் சரியாகிவிடும் என்று நாமும் காத்திருப்போம்’ என தெரிவித்துள்ளார்.