‘வடசென்னை’ பட நாயகி ஆண்ட்ரியா ஒரு பத்திரிகையின் காலண்டருக்காக மேலாடையின்றி போஸ் கொடுத்திருப்பது பரபரப்பை உண்டாக்கியுள்ளது. அப்புகைப்படத்தை ஆண்ட்ரியாவே தனது இன்ஸ்டாகிராம் பகத்தில் பகிர்ந்து சூட்டைக் கிளப்பியுள்ளார்.

பாடகியும், நடிகையுமான ஆண்ட்ரியா தமிழ்,மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய நான்கு மொழிகளிலும் தனக்குப் பிடித்த கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து குறைவான படங்களில் மட்டுமே நடித்துவருகிறார். தமிழில் கடைசியான ‘வடசென்னை’ படத்துக்குப் பின்னர் இவர் நடிக்க சம்மதித்திருக்கும் ஒரே படம் ‘கா’ மட்டுமே.

இந்நிலையில் நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேலாடையின்றி கடல்கன்னி போல் போஸ் கொடுத்த படங்களை வெளியிட்டு அதை எடுத்த புகைப்படக்காரருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.

இதே காலண்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஷ்ரேயா, ரெஜினா ஆகிய நடிகைகளும் இடம் பெற்றுள்ளனர். இப்போதெல்லாம் நடிகைகள் படங்களில் கவர்ச்சி காட்டுகிறார்களோ இல்லையோ தங்களது ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களை கிளுகிளுப்பாக வைத்துக்கொள்கிறார்கள்.