நடிகை ஆண்ட்ரியாவின் பிறந்தநாளை முன்னிட்டு, இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் அவர் நடித்து வரும் 'மனுஷி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

தமிழ் சினிமாவில் தன்னை ஒரு சிறந்த பாடகியாக ரசிகர்களை கவனிக்க வைத்த பின்னர், நடிகையாக மாறியவர் ஆண்ட்ரியா. கதைக்கு தேவை என்றால்... எந்த அளவிற்கு வேண்டுமென்றாலும், துணிந்து கவர்ச்சி காட்டும் நடிகை ஆண்ட்ரியா, இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடித்துள்ள 'பிசாசு 2' படத்தை, எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மேலும் கடந்த வாரம் இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில், இவர் நடித்துள்ள 'அனல் மேலே பனித்துளி' திரைப்படம், சோனி லைவ் ஓடிடி தளத்தில், நேரடியாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது சுமார் அரைடஜனுக்கும் அதிகமான படங்களில் நடித்து வரும் ஆண்ட்ரியா தொடர்ந்து, கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். 

அந்த வகையில் நடிகை நயன்தாராவை வைத்து, கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற 'அறம்' படத்தை இயக்கிய இயக்குனர், கோபி நயனாரின் இயக்கத்தில் நடிகை ஆண்ட்ரியா கதையின் நாயகியாக நடித்து வரும் திரைப்படம் 'மனுஷி'. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகை ஆண்ட்ரியாவின் பிறந்தநாளை முன்னிட்டு, பிரபல நடிகர் சூர்யா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


இந்த படத்தை பிரபல இயக்குனர் வெற்றிமாறன் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 'அறம்' படத்தைப் போலவே, இந்த படமும் மிகவும் அழுத்தமான கதைக்களத்தை கொண்டது என்பது இப்படத்தில் இருந்து வெளியாகி உள்ள இரண்டு போஸ்டர்களை பார்த்தாலே தெரிகிறது. இந்தப் படத்தின் போஸ்டர்களே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.